பக்கம்:சுலபா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 Jorff'ss?

வேற ஏதோ ஒரு ஸ்டில்லை ப்ளோ அப் செஞ்சு விளம்பரம் பண்ணிட்டசன், என்னை அது மாதிரிவினு நெனச்சீங்களா?ஐ வாஸ் எ ஸ்டுடண்ட் ஆஃப் லிட்டரேச்சர் சார்!"

'சரீப்பா! என்னை விட்டுடு, தெரியாத்தனமர உங்கிட்ட வாயைக் குடுத்திட்டேகி' என்று ஆடிட்டர் அலறியே விட் டார். குப்தாவுக்கு இதை எல்லாம் தண்டபாணி மொழி பெயர்த்துச் சொன்னபோது அவன் சிரித்து ஒய அதிக நேரம் பிடித்தது.

நியூ பார்கவியின் திறப்பு விழா விளம்பரங்கள் தமிழ் ஆங்கில தினசரிகளில் எல்லாம் முழுப்பக்க அளவில் வெளியா யிற்று. குப்தா சொன்னபடி மூத்தவன் தண்டபாணியும், இளையவன் குமரேசனும் முக்கியப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொன்டனர்.

திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாகச் சிம்லாவில் இருந்து குப்தாவின் மைத்துனன் அஜீத்குமார், குப்தாவின் மாமனர் குருசரண் இருவரும் வந்திருந்தனர். அங்கே போயிருந்த சுஷ்மாவும் பார்கவியும் இவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்னதாகவே குருபுரம் வந்து சேர்ந்து விட்டனர். குருபுரமும் சிவவடிவேலுவின் விடும் கல்யாணக் களை கட்டின.

ஒட்டில் நியூ பார்விையின் திறப்பு விழா விளம்பரங்கள் பத்திரிகைகளில் தடபுடல் பட்ட அதே நேரத்துக்கு டி எஸ்டேட் லொக்கேஷனில் ஒரு பிரமாதமான தமிழ்த் திரைப் படத்தை எங்கே எடுக்கலாம் என்று உரிய இடத்தையும் வசதி களையும் தேடி அலைந்து கொண்டிருந்த கோடீசுவரனை புரொட்யூசர் ஒருத்தர் குருபுரம் வந்து சுமார் இரண்டு மாத காலத்துக்கு ஒரு சூப்பர் ஸ்டிார் நடிகர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை டைரக்டர் புரொட்யூசருக்கு 4 ஏ. சி. ரூம்-மற்ற யூனிட் ஆட்களுக்கு பாத் அட்டாச்டு ரூம்ஸ் என்று முக்கால் ஒட்டலையும் அட்வான்ஸ் கொடுத்து ரிஸர்வ் பண்ணிவிட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/208&oldid=565876" இலிருந்து மீள்விக்கப்பட்டது