பக்கம்:சுலபா.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 207

நியூ யார்கவியின் மேல் அதிர்ஷ்டிக் காற்று வீசத் தொடங்கியது. தமிழ்ப்பட உலகில் வரப்பு, வயல்வெளி, கிராமம், கிராமத்துத் திரைக் கதைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அப்படிப் படங்கள் ஸின், ஸ்டுடியோ, ஸெங் வாடகை ஃப்ளோர் அரேன்ஜ்மெண்ட்ஸ் செலவுகள் இல்லாமல் யூனிட்டோட ஒரு கிராமத்துக்குப் போளுலே நிறைவேறியது. சிக்கனமாகவும் லாபகரமாகவும் புரொடக்ஷன் முடிந்தது. படங்களும் பணத்தை வாரிக் கொண்டுவந்து தயாரிப்பாளரிடம் கொட்டின, சிங்கிள் புரொடக்ஷன் யூனிட்டோடு போய்ப் படத்தையே முடித்துக் கொண்டு வருகிற வசதி இருந்தது. பாட்டு, மெட்டு. இசையமைப்பு முதல் சகலத்திலும் கிராமாந் தசத்துக்கு ஒரு திடீர் யோகம் வந்தது. டி ஷர்ட், ஸ்ஃபாரி, ജക്. பெல்பாட்டம், நாகரிகங்கள் தோற்றுத் தலைப்பாகை, உருமால். வண்டி ஒட்டுவது, வயல்களில் உருளுவது, பெண்கள் தொளி கலக்குவது, நாற்று நடுவது, களை எடுப்பது, தேயிலை ஏலக்காய் பறிப்பது என்று இப்படி ஒரு புதுக் காற்று விசி ஆரம்பித்தது. கல்லூரி வகுப்பறை, பஸ்கள் ஸ்டாண்டு நகரத்து வீதிகள், கடைகள். தியேட்டர் முகப்புக்களில் காட்டி முடிந்ததைவிட வயலின் சேற்றுக்கு நடுவே, களை பிடுங்க முழங்கால் வரை சேலையைத் தூக்கிக் கட்டிய கோலத்தில் கிராமக் கலாச்சாரம் என்ற பெயரில் இரவிக்கை அணியாமல் மேற்சேலை மட்டும் கட்டிய வாளிப்பில் அதிகமாக லெக்ஸைக் காட்ட முடிகிற உத்தியை-ரகசியத்தைத் தயாரிப்பாளர்கள் திடுதிப்பென்று புரிந்துகொண்டு படை எடுத்திருந்தார்கள்.

ஆல்ை அதில் ஒரு பிரசினை. ஆறு, ஓடை. வயல்வெளி, மரக்கூட்டம், அருவிக்கரை, எஸ்டேட் என்று லொக்கேஷன் கலர் ஃபுல்லாக அழகாகக் கிடைத்தால் அங்கே ஆர்ட்டிஸ்ட்டு களும், யூனிட்டும் தங்க வசதி இருப்பதில்லை. தங்க வசதி பிரமாதமாகக் கிடைத்தால் அங்கே லொக்கேஷனே கிடைப்ப தில்லை. பார்கவியும் இயற்கை லொக்கேஷன் வசதிகளும் சேர்ந்தே குருபுரம் கிடைத்தவுடன் திடீரென்று குருபுரத்திற்கு ஒரு யோகம் அடித்தது, பார்கவிக்கும் சான்ஸ் அடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/209&oldid=565877" இலிருந்து மீள்விக்கப்பட்டது