பக்கம்:சுலபா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 19

வர வேண்டியதுதான். எதாவது மெடிகல் ட்ரீட்மெண்ம் அது.இதுன்னு புளுக வேண்டியதுதான்.'"

'ஒரு நடிகனே நடிகையோ எக்காரணத்தை முன்னிட்டும் பொய்யாகக் கூடத் தனக்கு நோய் வரும், தான் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாதிரிச் செய்திகளைப் பரப்பவே கூடாது. அது ஆண்டி செண்டிமெண்ட்ஸ்' விவகாரம். கவர்ச்சியை உடனே பாதிக்கும். தன்னுடைய அபிமான ஹீரோ அல்லது ஹீரோயின் உடல் நலம் கெட்டு மருந்து சாப்பிட நேரிடும் அல்லது சிகிச்சைக்குப் போக நேரிடும் என்பது போன்ற கற்பனையின் சாயல்கூட விசிறியின் மனத்தில் விழக் கூடாது.'

"உன்னுடிைய லெளகீக ஞானம் பிரமாதம் சுலபா! நீ சொல்றது தான் சரியான ஸைகாலஜி. உடல் நலக் குறைவுவினு சொல்லி வெளிநாடு போக முடியாது. கூடாது' "ஒரே ஒரு வழிதான் இருக்கு! இப்போ நான் நடிச்சிம் டிருக்கிற புரொடக்ஷன்ஸிலேயே ஏதாவதுரெண்டொண்ணுலே ஃபாரின் லொக்கேஷனை வர்ர மாதிரிப் பண்ணுங்கன்னு யோசனை சொல்லி நமக்கும் ஒரு பைசாச் செலவு இல்லாமே அவங்க காசிலேயே ஊர்சுத்திப் பார்க்கலாம்'

'திடீர்னு கதையை அப்பிடி மாத்த முடியுமா சுலபா?’’ 'நம்ப சினிமாவில் எப்பிடி வேணும்னலும் எப்பவேணும் லுைம் மாத்த முடிஞ்ச ஒரே விஷயம் கதைதான் சார்! நம்ம இஷ்டத்துக்குப் பண்ணிக்கலாம்'

"அப்படின்கு ஒரு சினிமாக் கதைங்கிறது குடுகுடுப்பைக் காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்டி துணியா ஆயிடாதா?" "ஏற்கெனவே சினிமாக் கதாசிரியருங்களே அப்பிடித்தான் சட்டையைத் தைச்சு எடுத்திட்டு வந்திருப்பாங்க! அதுலே இன்னும் ரெண்டு ஒட்டுக் கூடப்போடச் சொல்லி நாம சொன்னக் கேட்டுப்பாங்க..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/21&oldid=565689" இலிருந்து மீள்விக்கப்பட்டது