பக்கம்:சுலபா.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 209

மில்லாமல் எப்படியாவது பார்கவியை இழுத்துப் பறித்து நடத்தி வாருங்கள். மகாபூரீ குப்தா சொல்லும் புதிய யோசனைகளை நான் வந்தபின் அமுல் பண்ணலாம்,' என்று ஆடிட்டிருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார் சிவவடிவேலு. அதை எல்லோரும் படித்துச் சிரித்துக் கொண்டார்கள். இந்த மூன்று நான்கு மாதங்களுக்குள் பெரிய யுகப் புரட்சியே நடந்த மாதிரி மாறுதல்கள் நடந்து பார்கவி நியூ பார்கவி ஆகி லாபம் கொழித்துக் கொண்டிருக்கும் விஷயம் தெரியாமல் சிவ வடிவேலு அதைச் செத்து விடாமல் காப்பாற்றிக் கொண்டி ருங்கள்! நான் வந்து முழுக்கவும் பிழைக்க வைத்துக் கொள் கிறேன்" என்பது போல எழுதியிருந்தது வேடிக்கையா யிருந்தது.

சில படத்தயாரிப்பாளர்கள் திரையில் டைட்டில் காண்பிக்கும் போதே, இந்தப் படத்தின் தயாரிப்புக் காலத்தில் எங்களோடு பெரிதும் ஒத்துழைத்த குருபுரம் நியூ பார்கவி உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் நன்றி கூறக் கடிமைப் பட்டிருக்கிருேம்’-என்றும் சேர்த்துக் காட்டிவே விளம்பரமாகி விட்டது. பேர் பெரிதாகி இருந்தது. பார்கவி பிரபலமாகி இருந்தான். -

மதுரையில் அப்படியும் இப்படியுமாகத் தொடர்ந்து போராட்டம் கதவடைப்பு என்று குமாரி பார்கவியின் கல்லூரி வதைப்பட்டாலும் ஒருவழியாக ஃபைனல் பரீட்சை எழுதி விட்டாள் அவள். கல்லூரிக்கு குட்பை" சொல்லியாயிற்று.

சுஷ்மா குப்தாவுடன் பழக ஆரம்பித்ததிலிருந்தே அவளிடம் பல இனிய மாறுதல்கள் நிகழத் தொடங்கியிருந் தன. குமரேசனின் பாஷையில் மாறுதல் என்பது வளர்ச்சியின் ஆரம்பம், அதுவும் அவள் சுஷ்மாவுடன் சிம்லாவுக்குப் போய்ச் சில நாட்கள் இருந்துவிட்டு வந்ததும் சில நளினமான மாற்றங்கள் பார்கவியிடம் தென்பட்டன. தனக்குத் தானே புதுமாதிரி உடுத்தி அழகு பார்த்துக் கொண்டாள். சின்னதும் பெரிதுமாக இந்திப் படி ட்யூன்களை "ஹம்மிங் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/211&oldid=565879" இலிருந்து மீள்விக்கப்பட்டது