பக்கம்:சுலபா.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பார்கவி

இப்போது மாறுதல் நடந்தபின் சம்பந்தப்பட்டி அனைவருமே உணர்ந்திருந்தனர்.

"சிவவடிவேலுவின் பையன்கள் எவனோ ஒரு வட நாட்டு ஆசாமியின் ஒத்துழைப்போடு கேரளாவிலிருந்து பொம்பளைங் களே வரவழைச்சு என்னென்னமோ பண்ணிப் பழைய பார்கவி யின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுத்து விட்டார் கன். தண்ணியும், பொண்ணுங்களுமா பார்கவியிலே எல்லாம் சினிமாக் காரணுவளாத் தங்க ஆரம்பிச்சிட்டாங்க, முதலாளி மட்டும் இப்ப இங்கே இருந்து இதைப் பார்த்தாங்கன்ன அப்படியே கண்ணுலே ஜலம் விட்டு அளுவாக!' என்று கொஞ்ச நாள் பேசிப் பேசி அலுத்து அப்புறம் ஓய்ந்து போளுன் கரும்பாயிரம். -

அவன் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. தான் மாதவி டுர்ஸ் அண்ட் டிராவல்ஸ் மூலம் சிவவடிவேலுவுக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துத் தன் விஷய மாக அவர் ஆடிட்டர் அனந்துக்கு அல்லது வேறு யாருக்காவது கடிதம் எழுதித் தன்னைக் காப்பாற்றுவார் என்று கரும்பாயிரம் காத்திருந்தது வீணுயிற்று. அவனும், தவசிப் பிள்ளையும், பழைய பார்கவியின் ஸ்டோர் கீப்பரும், விலக்கப்பட்ட வேறு சிலரும் சேர்ந்து மலை மேல் ஆஞ்சநேயர் கோயில் வாசலில் ஒரு கேன்டின் திறந்தனர். -

கோவிலுக்காக மலை மேல் வந்து போகிற கூட்டத்தைச் சமாளிக்க அது மாதிரி ஒன்று தேவையாகவும் இருந்தது. வியாபாரம் தான் ஸ்டடியாக இல்லை. ஒரு நாள் ஆயிரம் ரூபாய் இன்னொரு நாள் என்னுாறு ரூபாய் என்று முன்னும் பின்னுமாக வந்தது. -

எப்போதும் போல் வலது காதில் பூவும் வில்வமும் நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமமுமாகப் பார்கவியில் உட்கார்ந்திருந்து வியாபாரத்தை ஒட்டினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/216&oldid=565884" இலிருந்து மீள்விக்கப்பட்டது