பக்கம்:சுலபா.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт,шт. 228.

"யூ மீன் ஒட்டில் பார்கவி ஆர் யுவர் யங்கர் சிஸ்டிர் பார்கவி?’’

"ஐ மீன் போத்...'

"நியாயந்தான். இரண்டு பார்கவிகளுமே மாறித்தான் போயிருக்காங்க. சல்வார்கம் மீஸோட இந்தப் புது பார்கவி நிக்கறதைப் பார்த்துச் சிவசிவா என்று கண்ணைப் பொத்திக் கொள்ளப் போகிருர் அவர்.'

"பூனை கண்களை மூடிக் கொள்வதால் உலகம் ഭൂത്രിദ്ര് போய் விடாது." -

"ஆல்ை எலிகள் கவலைப்பட வேண்டியிருக்கும்."

"எங்கப்பாவும் நாங்களும் பூனையும் எலியுமா இருக் கேரம்னு சொல்றீங்க..."

'அய்யய்யோ! நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லல சாமீ. உங்க கணிப்பெல்லாம் சரியா இல்லாமப் போனலும் போகும். மனுஷைேட முக்கால்வாசி முரண்டுக்குக் காரணமே பல இடங்களைப் பார்க்காமல் பழகாமல் கிணற்றுத் தவளையா இருக்கிற்துதான். நாலு இடிம் சுத்திட்டுத் திரும்பி வந்தா மனசு விசாலப்படும். விட்டுக் கொடுக்கிற மனசு வரும்: பிரயாணம் ஒரு மனுஷனை ஞானஸ்தளுக்கா விட்டால் வேற எதேைலயும் அவனை ஞானஸ்தளுக ஆக்கவே முடியாது. உங்கப்பா முக்கால்வாசி இந்தப் பிரயாணத்திலேயே மெல்லோ ஆகியிருப்பார்னு நான் நினைக்கிறேன்' என்ருர் ஆடிட்டர். -

'மொதலாளி கும்புடறேனுங்க. என்னைக் காப்பாத்த ணும்')னு கரும்பாயிரம் கால்லே விழுந்தவுடனே பிரயாணத் தாலே வந்த அத்தனை ஞானமும் போயிடும் சார்'

" தெரியுமா. சங்கதி! கரும்பாயிரம் மலையிலே கோயில்

முகப்பிலே காண்டின் போட்டிருக்கானம், தவசுப்பிள்ளைதான், சாக்கு மாஸ்டர்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/225&oldid=565893" இலிருந்து மீள்விக்கப்பட்டது