பக்கம்:சுலபா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பார்கவி

ஆசையா இருக்கா உனக்கு?’ என்று குமரேசனை ஆடிட்டர் சாடினர்.

| 6

ஊர் திரும்புகிற நாள் நெருங்க நெருங்கச் சிவவடி வேலுவுக்குக் கவலைகள் அதிகமாகிவிட்டனவோ என்னவோ டோக்கியோவிலிருந்து எழுதிய கடிதத்தில் ஊரில் கோடெள னில் இருக்கிற ஏலக்காயைப் பற்றி அதிகமாகப் புலம்பி யிருந்தார். பார்கவி பற்றியும் அதிகமாகப் புலம்பியிருந்தார்.

"பார்கவிக்குச் சூதுவாது தெரியாது. ஆனல் என் மேலே பிரியம் அதிகம். பசங்களைப் போல என்னை எதிர்த்துப் பேசற துணிச்சல் அவளுக்கு இல்லை. பவர் பத்திரம் கொடுத்துட்டு வந்திருக்கிறதைப் பயன்படுத்தி அவளை யாராவது ஏமாத்தி எதுக்காவது கையெழுத்து வாங்கிடிப் போருங்க. அதனுலே அந்த விஷயம் ரகசியமாவே இருக்கட்டும். -

"அத்தியாவசியமான செலவு மட்டும் நடக்கட்டும்! எதுக் காகவும் எஃப்.டி. எதையும் மெச்சூர் தேதிக்கு முள்ளுல் எடுக்க வேண்டாம். குப்தாவே சொன்னலும் மாறுதல் எதையும் அவசரப் பட்டுப் பண்ணிட வேண்டாம். ஒரு தடவைக்கு நூறு தடிவை யோசனை பண்ணுமே எதையும் பண்றது சரியா வராது.

கோடெளன் ஏலக்காயை விலைவாசி நேரம் பார்த்து மார்க்கெட்டில் விடவேண்டும். இல்லாவிட்டால் எஸ்டேபி. மெயின்டெனன்சுக்குக் கூடக் கட்டுபடி ஆகாது. ஞாபகம் வச்சுக்குங்க.

தினசரி ராத்திரி வீட்டுக் கதவைப் பத்திரமாகத் தாழ் போட்டுக் கொள்ளச் சொல்லவும், அந்தத் தறுதலை குமரேசன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி ஒருமணி ரெண்டு மணிக்கு வீடு திரும்புவான். அவனுக்கு மறதி அதிகம், பார்கவி சிறிசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/228&oldid=565896" இலிருந்து மீள்விக்கப்பட்டது