பக்கம்:சுலபா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 21

"நான் மட்டுமில்லே! எனக்கு ஒரு பெர்ஸனல் அஸிஸ் டெண்ட் வேணும்னு புரொட்யூஸரை வற்புறுத்தி அவங்க செலவிலேயே கவிதாவையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்து டலாம்." - -

  • நல்ல ஐடியா! உடனே முடிவு செய்து போயிட்டு வாங்க! மனசும் தெம்பா ஃப்ரஷ்ஷா ஆகும். சலிப்பு நீங்க அதுதான் சரியான வழி'

"இன்னிக்கி யாராவது புரொட்யூஸ்ருங்க வருவாங்க, பேசிப் பார்க்கிறேன். அநேகமாக நான் சொன்னத் தட்டிச் சொல்லமாட்டாங்க"-என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காரியதரிசி கவிதாவின் பக்கம் திரும்பி, ஞாபகம் வச்சிக்கோ கவிதா! இன்னிக்கிக் கால்வீட்-யாராவது புரொட்யூஸர் தேடி வருவாங்க. அப்போ இதை ஞாபகப்படுத்து'- என்ருள். கவிதாவும் சரி என்று தலையை அசைத்தாள். ஆடிட்டர் கனக சபாபதி திருப்தியாக விடைபெற்றுக் கொண்டுபோய்ச் சேர்ந் தார். ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து கறுப்பில் வரவேண்டிய ரொக்கம் வராததால் அவருடைய தயாரிப்பில் அன்றைய கால்ஷிட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்து பிடிவாத மாக வீட்டிலிருந்தாள் சுலபா. -

சூட்சுமம் அவளுக்குத் தெரியும். இது ஒரு டெக்னிக். காமிரா, ஸ்டுடியோ, புரொடக்ஷன், யூனிட் எல்லாம் தயார்ப் பண்ணி நிறுத்திய பின் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்ருல் மற்ற ஏற்பாடுகள் வீனகி விடும். எங்கேயாவது கொள்ளை வட்டிக்குக் கைமாற்று ஏற்பாடு செய்தாவது ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வீடு தேடி வருவார்கள். அதற்கு முன் போய்விடக் ởsta. L-irġifs

சுலபா இப்படி நாட்களில் நரசம்மாவை டெலிஃபோன் அருகே உட்கார்த்தி வைத்து விடுவாள். அவள் டெலிஃபோனே எடுத்து, "அவங்களுக்கு உடம்பு நல்லா இல்லே! இன்னிக்கிக் 'கால்வrம் முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டாங்க'.

高一2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/23&oldid=565691" இலிருந்து மீள்விக்கப்பட்டது