பக்கம்:சுலபா.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sð r • r*r » 329

சுய அறிமுகப் பிரசங்கத்தில் இறங்கிவிட்ட குமரேசனை நிறுத்து வதற்காக, " ஹேண்ட்ஸ் ஆஃப்! நான் தோல்வியை ஒத்துக் கிறேன். விட்டுடு. நீதான் அறிவு ஜீவி. நீதான் மொபைல் யூனிவர்சிடி! நீதான் சகலமும்,' என்ருர் அனந்த்.

"என்ன சார்? நான் கஷ்டப்பட்டுத் தமிழாக்கம் செய்யற வார்த்தைகளை எல்லாம் நீங்க மறுபடி ஆங்கிலமாக்கிடlங்க?"

'சில சமயத்திலே உன் தமிழாக்கம் எனக்குப் பிடிபட லேப்பா..." - --

"இங்கே போர்டு ஹைஸ்கூல்லே மறைக்காடர்ன்னு ஒரு தமிழாசிரியர் இருக்கார். தஞ்சாவூரு சைடு, கோடிக்கரை சொந்த ஊரு. அவர் எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திச் சொல் றேன்னு குருபுரம் லோகல் ஃபண்டு ஆஸ்பத்திரி டாக்டரை அவர் பாணியிலேயே மாத்தி இடாக்குடர்'-ங்கிருரு. தமிழ்லே 'டா' முதல்லே வராதாம். இடாக்குடர்னா' அர்த்தமே அனர்த்தமாயிடுது. காலிவயிறுன்னு அர்த்தம் . அதாவது ஒன்றும் இடாத குடல்ன்னு ஆகும்! அதுமாதிரி எல்லாம் நான் தமிழை வம்பு பண்ணறதில்லே ஆடிட்டர் 凸r骨景”” -

உன்னலே எந்த அளவு முடியுமோ அந்த அளவு வம்பு பண்றேன்னு ஒத்துக்கறியா?" -

"குறும்புக்காரப் பேர்வழி சார் நீங்க." 'இல்லே! அந்த மறைக்காடர் உன்னைவிட அதிகமாக வம்பு பண்ருர்கு ஒரு வேளை உன்னைக் காட்டிலும் பெரிய அறிவு ஜீவினுை தோணுது.'

ஐயையோ கொல்lங்களே, சார்." அறிவு ஜீவிகளே மத்தவங்கக் கொல்றது வழக்கம்.' இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது குப்தாவும் ஆர்க்கிடெக்ட்டும் அந்தப் பக்கமாக வந்து சேர்ந் தார்கள். இவர்கள் அசட்டிைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

音一15 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/231&oldid=565899" இலிருந்து மீள்விக்கப்பட்டது