பக்கம்:சுலபா.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பார்கவி

"இன்னிக்கு அஜீத் வரான். மதுரை ஏர்போர்ட்டுக்குக் கார் அனுப்பிடுங்க. மத்தியானம் மூணு மணிக்கு போர்டு மீட்டிங். நீங்களும்கூட இருக்கீங்க. பார்ட்னர்ஷிப் டிம் தயாராயிடணும். இன்னிக்கும் நாளைக்கும்தான் அஜீத் குருபுரத்திலே தங்க முடியும்.’’ என்ருன் குப்தா.

எல்லாம் தயாராயிருப்பதாக ஆடிட்டர் கூறிஞர். இவர் கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே ஏ.சி. சுய மங்களம் ரெஸ்டாரெண்ட்டில் பரிமாறும் தேவசேன என்ற பெண் வந்து குமரேசனின் அருகில் நெருங்கி, சார், உங்க பிரேக்ஃபாஸ்ட் ரெடி இட்டிலி சூடா இருக்கு. இப்பவே வந்து சாப்பிட்டுடுங்க." என்றாள். குமரேசன் உடனே அவளைப் பின் தொடர்ந்து ஏ. சி. ரெஸ்டாரெண்டில் நுழைந்தான்.

ஆடிட்டர், குப்தா இருவரும் அர்த்த நிறைவுடன் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை பூத்தனர். குப்தா சொன்னன்.

குமரேசன் இஸ் ஆல்வேஸ் கெட்டிங் ஸ்பெஷல் அட்டென்ஷன் ஃப்ரம் தேவசேன,'

"நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். அந்தப்

பொண்ணு இவனையும் இவன் அந்தப் பொண்ணையும் ஒருத் தரை யொருத்தர் விசேஷமாகக் கவனிச்சுக்கிறாங்க."

"எவ்வரிதிங் ஸ்டார்ட்டம் அம். சுப மங்களம். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டர் அனந்த்?"

"சுப. மங்களத்திலே ஸ்டார்ட் ஆகிற விஷயம்லாம் சுப மங்களத்திலே போய்த்தான் முடியும் போல் இருக்கு மிஸ்டர் குப்தா!'

"ஓல்ட் மேன் திரும்பறத்துக்குள்ள நல்லதை எல்லாம் முடிச்சுடனும்! இல்லாட்டா அன்ப்ரடிக்டபிளாப் போயிடும்."

"நாம் முடிக்கனும்கிறதே இல்லே மிஸ்டர் குப்தா! அதது தானகவே முடிஞ்சுடும் போல இருக்கு. இன்னிக்குப் போர்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/232&oldid=565900" இலிருந்து மீள்விக்கப்பட்டது