பக்கம்:சுலபா.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 aார்கவி

'காதல் டிடியில்ஸ் பார்க்காது. லவ் ஹாஸ் நேச அய்ஸ்,’’ "பம் சிவவடிவேலு ஹாஸ் அய்ஸ்." "அவர் வர்றப்ப ஆசீர்வாதம் பன்னறதைத் தவிர வேற வேலையே மிச்சம் இருக்கப்படாது மிஸ்டர் அனந்த், எந்த டெஸிஷனையும் அவருக்காக காக்க வைக்காதீங்க, எல்லாமே கெட்டுப் போகும். அட்சதையைக் கையிலே கொடுத்து, 'குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணுங்க'ன்னு அஜீத்பார்கவி, குமரேசன்-தேவசேன ரெண்டு ஜோடிங்களையும் விழுந்து கும்பிட வச்சிறனும்.'

'குமரேசன் சுய மரியாதைக்காரன். அவரைக் கால்லே விழுந்து கும்பிட மாட்டிான்."" .

"அதெல்லாம் அந்தத் தேவசேனயை விட்டுச் சொல்ல வச்சுடலாம். அவள் சொன்னல் தானு விழுந்து கும்பிடருன் .' ஆடிட்டர் சிரித்தார், குமரேசன் ஏ. சி. ரெஸ்டாரெண்டி லிருந்து ஏப்பத்தோடு வெளியே வந்தான்,

“இது என்னப்பா? அந்தப் பொண்ணு நாங்கள்ளம் இருக்கறப்ப உன்னை மட்டும் கூட்டிட்டுப் போய் டியன் குடுக்குது. என்னப்பா இதிலே ரகசியம்?"

ரகசியம் ஒண்னுமில்லே பரம ரசிகன் யாருன்னு அதுக்குத் தெரியும். அதான் என்னை மட்டும் வந்து கூப் பிட்டுச்சு.'

"ஓகோ இது ரசனை விஷயமா?" என்று சிரித்தார்

அன்று அஜித் வந்து சேர்ந்தான். பார்கவிதான் அவனை விமான நிலையம் சென்று காரில் அழைத்து வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/234&oldid=565902" இலிருந்து மீள்விக்கப்பட்டது