பக்கம்:சுலபா.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jär, ar. 243

"அதெல்லாம் உங்களுக்கு எந்த அபாயமும் வராது. பிளேன்ல இருந்து இறங்கினதும் எங்கப்பா பேசற வாக்கியமும் இந்த சீல்டு கவருக்குள்ள எழுதி வச்சிருக்குற வாக்கியமும் ஒன்ன இருந்தா நான் ஜெயிக்கிறேன். இல்லாம்.டி மிஸ்டர் அனந்த் ஜெயிக்கிருர்,” என்ருன் குமரேசன்.

"சரி! உங்க இரண்டு பேரிட்டவும் பணப் புழக்கம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன். அதான் பந்தயம் கிந்தயம்ன்னு ஐயாயிரம் ரூபாயை வாரி விடlங்க!' . "ஐயாயிரம் ரூபாய் மட்டும் முக்கியமில்லை! இதிலே தெரியற முடிவு யார் நிஜமான அறிவுஜீவிங்கிறதைத் தீர்மானம் பண்ணிடும்,' என்று குமரேசன் சொன்னவுடன், "இந்தாப்பா குமரு. எனக்கு ரூபாய் கிடைச்சாலே போதும். இந்த அறிவு ஜீவி. அது இது எல்லாம் நீயே வச்சுக்க..." என மறுத்தார் ஆடிட்டர். . ! "கவலையே படாதீங்க! பணம், அறிவு ஜீவிப் பட்டம் ரெண்டுமே எனக்குத்தான்,' என்று தீர்மானமாகப் பதில் வந்தது குமரேசனிடமிருந்து.

"அப்படி என்னதான் இதுக்குள்ளே எழுதி சில் வச்சிருக்கீங்க? நான் பிரிச்சுப் பார்க்கலாமா?"

இப்பப் பிரிக்கப்படிாது ി. குப்தா எங்கப்பா வந்து இறங்கி முதல் வாக்கியத்தைப் பேசினதும் பிரிக்கலாம்.'

படு மர்மமாக இருக்கிறதே?" 'மர்மம்தான்! கவரைப் பத்திரமாக வச்சிக்குங்க, சில் உடிைஞ்சிருந்தா ஒத்துக்க மாட்டிோம்." -

பயமுறுத்தாதீங்க. பத்திரமா இருக்கும். குப்தா இருவருக்கும் உறுதி கூறி அனுப்பின்ை. அவனிடம் கவரை

அளித்துவிட்டுத் திரும்பும்போது மறுபடியும் ஆடிட்டர் குமரேசனைப் பிடித்துக் கொண்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/245&oldid=565913" இலிருந்து மீள்விக்கப்பட்டது