பக்கம்:சுலபா.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாகவி

"சும்மா எங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை உனக்கு மறைக்காமே எல்லாம் சொல்லனும்கிறதுக்காக இதைச் சொல்ருேம். தப்பா நெனைச்சுக்காதே. வி. ஆல் அக்ரி வித் யூ" என்ருர் ஆடிட்ட.ே

கல்யாணப் பத்திரிகைகள் அச்சாயின. மண விழா முழுவதையும் தன் பொறுப்பில் வீடியோ எடுக்க இவரிகளுக்கு வேண்டிய ஒரு புரொட்யூசர் முன்வந்தார். இரட்டிை நாதஸ் வரம், மாலையில் நாட்டியக் கச்சேரி எல்லாம் ஏற்பாடு ஆயிற்று. குமரேசன் விரும்பியபடி இரவில் ஒரு பட்டிமண்டபம் வேறு ஏற்பாடு ஆகியிருந்தது.

"அப்பாவை வரவேற்க ஏர்போர்ப் போக வேண்டிய நேரத்தில் நான் தேவசேனவுக்கும் அஜீத் பார்கவிக்கும் தாலி கட்டிக்கிட்டிருப்போம். அதனுலே நாங்க அவரை வர வேற்க முடியாது. குப்தா சார் உங்ககூட ஆடிட்டர் வருவார். மறக்காமல் அந்த சீல்டு கவரை எடுத்திட்டுப் போங்க. எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் வரும்படி இருக்கும்' என்ருன் குமரேசன்.

"சும்மா ரீல் விடாதே! அது உனக்குத்தான்னு என்ன உறுதி? வரும்படி எனக்குக்கூட இருக்கலாம். உனக்கு நஷ்ட மாகவும் இருக்கலாம். குருட்டாம் போக்கிலே கெஸ் பண்ணி இதைத்தான் பேசுவார்னு ரெண்டு வார்த்தையை நீயா எழுதிக் கொடுத்துட்டாப்லே ஆச்சா?’ என்று ஆடிட்டர் குறுக் கிட்டுச் சீறிஞர். -

"பார்க்கலாமே?' என்று அமுத்தலாகப் பதில் சொன் ஞன் குமரேசன். x: x . х

"இந்தியாவில் அவர் லாண்ட் ஆகிற தினத்தன்று பேப்பர்களில் வருகிற மாதிரி விளம்பரம் கொடுக்கணுமே? குமரேசா தமிழில் அழகா ஒரு டிராஃப்ட் எழுது." .w.

"என்னன்னு எழுதறது. ஆடிட்டர் சார்? விவரம் சொல் லுங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/248&oldid=565916" இலிருந்து மீள்விக்கப்பட்டது