பக்கம்:சுலபா.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பார்கவி

கொடுத்துடறேன்." என்று அந்தத் தாளை வாங்கி மறுபடி புதிதாய் எழுதலாளுன் ,

இப்போது இப்படிக்கு என்பதன் கீழே பெயர்கள் கூடி யிருந்தன. 'திரு. சந்திரஜித் குப்தா-திருமதி சுஷ்மா குப்தா, குருசரண் வர்மா, ஆடிட்டர் அனந்த், மகள் பார்கவி, ஆஜித் குமார், குமரேசன்-தேவசேன குமரேசன், தண்டபாணி, திருமதி தண்டபாணி, கடுக்கையூர் ஜோதிடர் கண்ணபிரான் மற்றும் விசுவாச ஊழியர்கள்’’ என்று போட்டு அவரிடம் கொடுத்தான் . -

குமரேசன் விளம்பரத்தை எழுதிப் பேப்பர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்.

கல்யாணத்துக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். விடும், ஓட்டலும் களை கட்டின. சில சூப்பர் ஸ்டார் நடிகர் களும், நடிகைகளும் குருபுரமே வந்துவிட்டதால் பார்கவியில் திருவிழாக் கூட்டம் கூடிவிட்டது. திருமணத்துக்கு முந்திய நாள் குருபுரமே தேர்த் திருவிழாவுக்குத் தயாரானது போல் தயாராயிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் ஒளி விளக்குகள். ஊர் முழுவதும் பார்கவி-குமரேசன் அவர்களு டைய திருமணம் பற்றிய பேச்சு. மறுநாள் காலை முகூர்த்த வேளையில் எல்லோருமே மதுரை விமான நிலையம் போக முடியாது என்பதால் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்க ஆடிட்டரும் குப்தாவும் மட்டும் போக இருந்தனர்.

20

அதிகாலையில் முகூர்த்தம் முடிந்த சூட்டோடு ஆடிட்ட ரும் குப்தாவும் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்கக் குருபுரத்திலிருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டனர். மதருஸ் டு மதுரை ஃப்ளைட் டேக் ஆஃப் டயமே இரண்டு மணி தாமதம் என்று காலை நாலு மணிக்கே அவர்களுக்குச் சென்ன்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/250&oldid=565918" இலிருந்து மீள்விக்கப்பட்டது