பக்கம்:சுலபா.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பார்கவி.

கள் வேறு யாரையோ தேடி வட்டமிட்டின. குப்தா, அனந்த் இருவரும் மாலைகளோடு தம்மை நெருங்குவதைப் பார்த்த பின்பும் அவர் கண்கள் வேறு யாரையோ தேடிக் கொண்டிருந் தன.

"மிஸ்டர் சிவவடிவேலு மிஸஸ் சிவவடிவேலு வெல்கம் டு குருபுரம்' குப்தாவும், அனந்துவும் அவர் கழுத்தில் மாலையைப் போட்டு அதை அப்படியே ஆச்சி கழுத்தில் மாற்றும்படி அவரையே வேண்டியபோதுகூடி எதுவும் பதிலுக்கு விசாரிக்காமல் இயந்திரகதியில் தம் கழுத்தில் விழுந்த இரு மாலைகளையுமே ஆச்சி கழுத்துக்கு மாற்றிவிட்டுப் பார்வையை அவர்களுக்கு அப்பால் விரைய விட்டபடி: 'கரும்பாயிரம் வரலியா?" என்ருர் சிவவடிவேலு.

அவரோ குப்தாவோ இதற்குப் பதிலே சொல்லாமல், 蠟 噁 兹 始 始

"ஹெள வாஸ் யுவர் டிரிப் டிட்யூ ஹாவ் எ நைஸ் டிரிப்? உங்கள் பிரயாணம் எல்லாம் செளக்கியமா?’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலுமாக விசாரணையைத் தொடங்கி ஞர்கள்,

அவரோ மறுபடியும், 'கரும்பாயிரம், எங்கே? அவன்

வரலியா? அவனைக் காணலியே?’ என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வாக்கியத்தை அரற்றிக் கொண்டிருந்தார்.

குப்தாவின் சட்டைப் பையிலிருந்த சீல்டு கவரை வாங்கி உடைத்துப் பிரித்துப் படித்தார் ஆடிட்டர் அனந்த். கவருக் குள்ளே இருந்த துண்டுத் தாளில் கரும்பாயிரம் வரலியா?" என்று குமரேசனின் கையெழுத்தில் எழுதியிருந்தது.

"என்ன? பந்தயம் என்ன ஆச்சு? குப்தா ஆவலோடு விசாரித்தான். .

"குமரேசன் வாஸ் கரெக்ட். ജ ു இட்," என்று சோகமாக ஆடிட்டரிடமிருந்து பதில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/254&oldid=565922" இலிருந்து மீள்விக்கப்பட்டது