பக்கம்:சுலபா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fir. Lur. 255

கார் குருபுரம் போகிறபோது, 'நெள எ டேஸ் பார்கவி இஸ் யேர்னிங் மோர் ப்ராஃபிட். வீ ஹாவ் கிளியர்டு ஒல்டு லோன்ஸ்," என்று குப்தா சொல்லிக் கொண்டு வந்ததை எல்லாம் காரை ஒட்டியபடியே ஆடிட்டர் மொழிபெயர்த்துத் தமிழில் சொல்லியும் சிவவடிவேலு, "கரும்பாயிரம் வரலியா?" என்பதிலேயே இருந்தார்.

மிகவும் தேர்ந்த பிஸினஸ் டாக்டரான சந்திரஜித் குப்தா எம். பி. ஏ, சி. எ. எஃப். ஆர். சி. எஸ். இப்போது தொழி லுக்குச் சிகிச்சை முடிந்து நாடப்பட்ட முதிய நோயாளியான தொழிலதிபருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்ற நிலை மையை உணர்ந்தார். திட்டமிட்டபடி ஆசீர்வாத நாடகத்தை நிமிடத்தில் முடித்து, 'பிரயாண அலுப்பு: சிவவடிவேலு இஸ் நாம் டுயிங் வெல். இன்னும் நாலைந்து நாள் கம்ப்ளிட் ரெஸ்ட்லே இருக்கணும்,' என்று எல்லாரிடமும் சொல்லி அவரையும் ஆச்சியையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவரைக் கவனிக்கிற பொறுப்பை ஆச்சியிடம் விட்டு விட்டுத் திரும்பினர், ஆடிட்டர். ஆப்பரேஷன் நியு பார்கவி! திட்டத்தின் கிளைமாக்ஸ் சீனை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிம்மதியாக ஆளுக்கு ஒரு ஸ்ட்ராங் காப்பியை அருந்திஞர் கள் குப்தாவும் ஆடிட்டிரும். -

அன்று மாலையில் கல்யாண ரிசப்ஷனின் போது, "என் சிகிச்சை முடிந்து விட்டது! போத் த பார்கவிஸ் ஆர் இன் வெரிகுட் கண்டிஷன். கீப்பிங் ஸ்வுண்ட் ஹெல்த் அன்ட் யேர்னிங் மோர் ப்ராஃபிட்! நாளை நானும் சுஷ்மாவும் ஊர் திரும்புகிருேம்,' என்று சொல்லிக் கொண்டிருந்த குப்தாவை இடைமறித்து, "பார்கவி லாபம் தருகிருள். ஆனல் பார்கவி யோட ஆடிட்டர் ரூபாய் ஐயாயிரம் நஷ்டமடிைகிருர்,' என்று குமரேசனுக்குப் பந்தய வகையில் தரவேண்டிய ஐயாயிரத் துக்கு எடுத்திருந்த கிஃப்ட் செக்கைக் குப்தாவிடம் காட்டினர் அனந்த். - - ,莎

"நோ நோ! இந்தக் கஞ்சத்தனத்தை நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க குமரேசனுக்குத் தரவேண்டிய பந்தயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/257&oldid=565925" இலிருந்து மீள்விக்கப்பட்டது