பக்கம்:சுலபா.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாரிகவி

பணம் தனி. மேரேஜ் கிஃப்ட் தனி. நேர டு இன் ஒன் பிஸினஸ்," என்று குப்தா ஆடிட்டரைக் கண்டித்தான். குப்தா கூறியதைக் கேட்டுத் தண்டபாணி சிரித்தான்,

"மிஸ்டர் குப்தா இந்தக் கஞ்சத்தனம் ஒரு இன்ஃபெக்ஷன். சிவவடிவேலுவிடமிருந்து தொற்றிக் கொண்டு விட்டது. இருப்பத்தைஞ்சு முப்பது வருஷமா அவரிட்டம் பழகறேன் இல்லியா?' என்று ஜோக் அடித்தார் ஆடிட்டர்.

"பை த பை, சிவவடிவேலு எப்படி இருக்கிருர்? எனி இம்ப்ரூவ்மெண்ட்' என்று ஆடிட்டரைக் கேட்டான் குப்தா.

உதட்டைப் பிதுக்கிவிட்டு ஆடிட்டர் சொன்னர். 'இப்போ மணி ஏழு ஆறே காலுக்குக்கூட ஆச்சியிட மிருந்து இங்கே ஃபோன் வந்தது! ஆறு பத்துக்கு நூத்தி எட்டாவது தடவையாகக்கூட, 'கரும்பாயிரம் வரலியா? நான் அவனைப் பார்த்தாகணுமே?'ன்னு தான் கேட்டாராம்."

  • தேருது ஹோப்லெஸ் கேஸ்! இனி இதுக்கு ஒரே ட்ரீட்மெண்ட்தான் இருக்கு. "தசாபுக்தி சரியாகலே. அர்த்தாஷ்டமச்சனி அது இதுன்னுசொல்லி இன்னும் கொஞ்ச நாள் வீட்டை விட்டு வெளியே விடாமலும் வெளியிலேயிருந்து வரும்பாயிரம் மாதிரி யாரையும் உள்ளே விட்டுடாமேயும் அவரைக் கவனிச்சுக்க வேண்டியதுதான்.

அந்தப் பொறுப்பை ஆச்சியே கவனிச்சிக்கிறேன்னு வாக்களிச்சிருக்காங்க. என்ருர் ஆடிட்டர், அப்போது தற் செயலாக ரிசப்ஷன் டிரெஸ்ஸோடு தடயுடலாக மாப்பிள்ளைக் கோலத்தில் தேவசேன சகிதம் அங்கே வந்த குமரேசன், "என்ன? பந்தயத்திலே தோத்தீங்களா? நான், அப்பவே சொன்னேன், கேட்டிரா?' என்று ஆடிட்டரை வம்புக்கு இழுத்தான். - -

உடனே தணிந்த குரலில் ஆடிட்டர், "தேவசேன சமேத சுப்பிரமணிய சுவாமியை ஜெயிக்க முடியுமா அப்பா?’ என்ற படியே கிஃப்ட் செக்கை எடுத்து நீட்டினர்.

'கலலைப்படாதீரும்! உம்ம டர்ட்டர் மேரேஜின்போது இதை வட்டியோட திரும்பித் தந்துடறேன்," என்ருன் பழைய பட்டிமன்ற வெற்றிவீரன் குமரேசன்.

(முற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/258&oldid=565926" இலிருந்து மீள்விக்கப்பட்டது