பக்கம்:சுலபா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ~&soramr.

தவிக்கிறேன். பிஸியா இருக்கிற உங்களைப் போய் ஃபாரின் கிள்ம்புங்கன்ன என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துக் கிட்டில்லே நான் ஃபாரினே வராமப் பார்த்துக் கிட்டிருக் இேன்’’.--

உங்க பயம் சரியில்லே! நான் கொஞ்சம் ஃப்ரீயா வெளி விலே சுத்தலாம்னு பார்க்கிறேன். லொக்கேஷன் முடிவு பண்ணி ஃபாரிஸ் எக்ஸேன்ஜ் எல்லாம் தாராளமா அரேன்ஜ் பண்ணுங்க. போயிட்டு வரலாம்"

சரி லெட்ல லஞ்ச் டயத்திலே இதைப் பத்தி மேலே பேசுவோம். இப்பக் கிளம்புங்க. போகலாம்! காத்துக்கிட்டி ருப்பாங்க"

காரியதரிசி கவிதா மேக்கப் பெட்டி முதலியவற்றுடன் உடன் கிளம்பச் சுலபா புறப்பட்டாள். கார் மோகினி ஸ்டுடியோ போகிறவரை மறுபடி ஃபாரின் லொக்கேஷன் பற்றிய உரையாடல்களே தொடர்ந்தன. சுலபா பிரவேசித்த வுடன் செட் களை கட்டியது, தயாரிப்பாளரின் கவலை எல்லாம் அன்றைய செட் வாடகை, காமிரா வாடகை, யூனிம் செலவுகள் விளுகிவிடாமல் வேலை நடந்து முடிய வேண்டுமே என்பதுதான். , - . . . . .”

அது தவிரவும் ஊர்வசி பட்டத்தை இரண்டு முறை பெற்றவளும் பேரைச் சொன்னலே ஏரியா விற்பனையில் போட்டி வரக்கூடியவளுமான பேரழகு நடிகை சுலபா மேல் எஸ். பி. எஸ்.ஸ்-க்கு ஒரு மயக்கமே உண்டு. அவள் நீ" தோப்புக் கரணம் போடு நான் எண்ணிக் கொள்கிறேன்?-- என்ருல் கூட உடனே இடுப்பில் மேலாடையைக் கட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடத் தொடங்கிவிடுவார். அவளை வைத்து அவர் தயாரிக்க இருந்த படங்களில் மூலமே அவர் கோடீசுவரராக முடியும் என்பதல்ை தொடர்ந்து அவளை, "நல்ல மூடில் வைத்துக் கொள்வதற்கு எதுவும் செய்யத் தயாராயிருந்தார் அவர் என்பதுதான் உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/28&oldid=565696" இலிருந்து மீள்விக்கப்பட்டது