பக்கம்:சுலபா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 &óðūff

'போகலாங்க... ஆளுக் கதை இடம் குடுக்கணுமே? பாதி எடுத்தாச்சே." -

"எடுத்தா என்னய்யா? "மாட்டுக்கார மன்னருை'ன்னு பேர் வைக்கிறதா இருந்தோம். இப்போ உலகம் சுற்றிய உழவன்’னு வச்சிட்டுப் போருேம்"

'ஏகமாச் செலவழிச்சு மாட்டுக்கார மன்னரு-மக்களைப் பார்த்துச் சொன்னரு-மக்கள் எல்லாம் அதிசயிச்சு நின்னரு' -ன்னு டைட்டில் சாங்' ஒன்ணு ரிக்கார்ப் பண்ணி யிருக்கமே...?"

சாங் பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே! இல்லாட்டி வேற படத்துக்கு யூஸ்பண்ணிக்கலாம். விட்டாலும் விட்டிரலாம்' -

"அது கஷ்டங்க... இப்ப இருக்கிற புரொடக்ஷன் காஸ்ட்லே ஒரு பாட்டுக்கு மட்டும் முப்பதாயிர ரூபாய்க்கு மேலே செலவாகுதுங்க... படத்திலே நாலு பாட்டுன்ன அதுவே கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் முழுங்கிடுது' என்று புரொடிக்ஷன் மானேஜர் தனபால் குறுக்கிட்டான்.

எஸ். பி. எஸ். விடவில்லை. தொடர்ந்து படிம் எடுக் கிருேம். பாட்டை எதிலயாவது சேர்த்து விட்டுறலாம். மத்த ஆஸ்பெக்ட்டைப் பத்தி யோசியுங்க" என்ருர், நேரடியாகச் சுலபா ஆசைப்படருங்கன்னு சொல்லி அவளை வம்பில் மாட்டி விடாமல் "டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஃபாரின் லொக்கேஷன் வேணும்ன்னு சொல்ருங்க" என்று விஷயத்தை யாருமே மறுக்க முடியாதபடி வெளியிட்டிருந்தார் எஸ். பி. எஸ். அருகே அழகுப் பொம்மையாக எதுவுமே பேசாமல் அமர்ந் திருந்த சுலபா கூடி அவரது சாமர்த்தியத்தை வியந்தாள். எஸ். பி. எஸ்ஸா கொக்கா? எதையும் முடிவு செய்ய வேண்டி யது அவர்தான் என்ருலும் ஒரு சர்வாதிகார முடிவையே ஜனநாயகமாக எடுப்பது போல் காட்டிக் கொள்ள விரும்புகிற தற்கால ஃபாஷனை அவரும் ஒப்புக்காகக் கடைப்பிடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/30&oldid=565698" இலிருந்து மீள்விக்கப்பட்டது