பக்கம்:சுலபா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jbir »tir • 29

கதை ஃபாரின் லொக்கேஷனுக்குப் போக வேண்டும்'. என்பது அவருடைய தீர்மானம் என்பது எல்லாருக்கும் புரிந்து விட்டது. இனி அதற்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதையும் எல்லாரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.

இதுலே சிரமம் ஒண்ணுமில்லே! புரொட்யூலர் சொல்ற படி பண்ணிடலாம். டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நினைக்கிறதைப் பன்னலேன்னக் கழுத்தறுத்துடுவாங்க... ஏரியா விற்பனை படுத்துப் போயிரும்' என்ருர் டைரக்டர்.

'எடிட் பன்றப்போ கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக் கிட்டாக் கதையைக் கோவையாக் கொண்டு போயிடலாம். எல்லாம் எடிட்டிங்கிலேதான் இருக்கு' என்ருர் ஹீரோ குமார விஜயன்.

சுலபா மட்டும் கடிைசிவரை வாயே திறக்கவில்லை. மெளனமாகச் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். மாலையில் ஷல்ட்டிங் முடிந்து அவரவர்கள் கிளம்பு முன். ஃபாரின் லொக்கேஷன் இருக்கு லண்டன் பாரிஸ் போருேம். ரொம்பச் செலவாகும். ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் கிடைக்கிறது கஷ்டம். அதுேைல ஒரு டஜன் ஆட்களுக்கு மேலே போய் விடாமல் ஒரு சின்ன யூனிட் மட்டும் போளுல் போதுமானது' என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் எஸ். பி. எஸ். வெளிநாட்டுப் பயணம் போவது உறுதி யாயிற்று.

s

தன் காரியதரிசி கவிதாவைத் தவிர அவரே எதிர்பாராத விதமாக ஆடிட்டரையும் கூட அழைத்துக் கொண்டு போளுள் சுலபா அதிலும் ஒரு திட்டம் இருந்தது. எங்கெங்கோ எப்படி எப்படியோ குல்மால் செய்து மாத்தி வைத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/31&oldid=565699" இலிருந்து மீள்விக்கப்பட்டது