பக்கம்:சுலபா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30: இல்யா

ஃபாரின் கரன்ஸியில் சுவிஸ் பாங்கில் ஒரு இரகசிய நம்பர் அக்கெளண்ட் வைத்துக்கொள்ள ஆடிட்டர் உடனிருக்க வேண் டும் என்று எண்ணினுள் சுலபா. அவளே ஆடிட்டரை உடன் வர வற்புறுத்தினுள்.

மிகப்பல சினிமாப் பெரும் புள்ளிகளின் நம்பர் ஒன் நம்பர் டு அக்கவுண்டுகளைக் கவனித்து வந்த ஆடிட்டர் கனக சார்பதிக்கு நல்ல அநுபவம் ஸ்விஸ் பாங்க் விவகாரங்களில் இருந்தத. தானே தனியாக ஏதாவது எடா கூடிமாகப் பண்ணிப் புரியாத தேசத்தில் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடா தென்று என்ணினுள் சுலபா. அதனுல்தான் ஆடிட்டரையும் கூப்பிட்டிருந்தாள். -

பாண்டிச்சேரியில் பிறந்து இப்போது பிரெஞ்சு நாட்டில் பல ஊர்களில் வாழும் உறவினர்கள் பலர் கனகசபாபதிக்கு இருந்தார்கள். அதனுல் அவர் உதவி தேவைப்பட்டது.

ஆளுல் பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றித் தயாரிப் பாளர் எஸ்.பி.எஸ்.சுக்குத் தெரிய விடவில்லை அவர்கள்.

• •గాణి உதவியாளர்ங்கிற முறையிலே கவிதா வரப்போரு, என்ைேடி ஆடிட்டரும் கூட வரார். அவர் செலவுகளை நான் பார்த்துக்கிறேன்'-என்று உபசாரத்துக்காக எஸ். பி. எஸ். ஸிடம் சுலபா கூறினுள், -

'செலவு என்னம்மா பெரிய விஷயம்? உங்க ஆடிட்டர். தானே? அவரும் நம்ம யூனிட்ல ஒருத்தர் மாதிரித் தான்! வரட்டும். நமக்கும் நாலு இடத்திலே பேசக் கொள்ள ஒரு படிச்ச ஆளாவது வேணும். அவருக்காக நீங்க செலவழிக்க வேணும் என் கிட்டவே விட்டுடுங்க-' என்று எஸ். பி. எஸ். பெருந்தன்மையாகப் பதில் சொல்லிவிட்டார்.

வாழ்க்கையில் அவளுடைய ஆசைகள் ஒவ்வொன்றும் சுலபமாக நிறைவேறி வந்தன. கடைசியாக இந்த ஸ்விஸ் பேங்க் ஆசையும் நிறைவேறப் போகிறது. சுலபா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/32&oldid=565700" இலிருந்து மீள்விக்கப்பட்டது