பக்கம்:சுலபா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 &épᎥᎫly

பற்ருக்குறை காரணமாக நியூயார்க்-டோக்கியோ எல்லாம் விடுபட்டுப் போயிற்று, அவர்களும் பொருட்படுத்தவில்லை.

இந்த ஃபாரின் லொக்கேஷனுக்கு ஆகிற செலவை மட்டுமே கணக்கிட்டால் கூட உள்நாட்டில் கச்சிதமாக இன் ளுெரு படம் எடுத்து முடித்து விடலாம் என்று தெரிந்தது. ஆளுலும் கண்ணே மூடிக்கொண்டு செலவழிக்கத் தயாராயிருந் தார்கள். "சுயவிரயங்கள் என்று சோதிட பாஷையில் ஒரு பதப்பிரயோகம் உண்டு. சுபமான வீண்செலவுகள்’ என்று

அதற்கு அர்த்தம். எஸ். பி. எஸ்.ஸைப் பொறுத்தவரை இது ஒரு "சுய விரயம்"தான்.

ஆளுல் பணம் விரயமாகாமல் சினிமாவில் லாபம் சம்பா திக்கவே முடியாது என்பதைப் பாலபாடமாகவே அவர் கற்றுத் தெரிந்துகொண்டிருந்தார். -

ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை பாதாம்கீர் கேட்டால் அவள் உதவியாள்-மேக்-அப்-மேன் நடிகையின் தாய் என்ற பெயரில் அவள் மெய்க்காப்பாளராக அல்லது பொய்க்காப்பாளராக செட்டுக்குள் வரும் மூகாட்டி, கார் டிரைவர் இத்தனை பேருக்கும் பாதாம்கீர் வாங்கிவர வேண்டி

யிருந்தது. ஆரம்பத்தில் இது எரிச்சலூட்டியது.

"என்னப்பாது? பணத்தை சும்மா வாரி விடlங்களே? யார் அப்பன் வீட்டுச் சொத்துப் பாழ்போதக அந்தப் பொம்பளைத்தான் நடிக்கிது. லைம் வெளிச்சத்தில் நின்னு வாட வேண்டியிருக்கு. பாதாம்கீர் கேட்குது! இவனுகளுக் கெல்லாமும் கூடப் பாதாம்கீர் இல்லாட்டி வேறஎதுவும் தொன் டையிலே எறங்காதோ?'-என்று கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார் எஸ். பி. எஸ். நடைமுறையில் அதல்ை பல இடைஞ்சல்களை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. என்னுய்யா இதமாதிரிக் கஞ்சப் பெட்டிப் புரொட்யூஸாை நான் பார்த்ததே இல்லை' என்று அவர் காதுபடவே பேச ஆரம் பித்தார்கள், - ... - . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/34&oldid=565702" இலிருந்து மீள்விக்கப்பட்டது