பக்கம்:சுலபா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 33

மெல்ல மெல்ல அநுபவம் வந்த பின்பு அவர் முற்ருக மாறினர். யாதார்த்தத்தைப் புரிந்துகொண்டார்.

இந்தக் கலையே ஒரு சுயவிரயம், இதில் போய் விரயம் வீன், என்று பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் இப்படி எத்தனையோ அழகான வீண் செலவுகள் இருக்கின்றன. விறகு வெட்டுகிறவன் நாள்முழுவதும் நெற்றி வேர்வை ஆருக ஓடி வேலை செய்துவிட்டு முப்பது ரூபாய்க்கும் குறைவாகக் கூலி வாங்கிக் கொண்டு போகிற இதே உலகில் அரைமணி நேரம் பாடுகிற இசைக்கலைஞன் கால்மணி நேரம் ஒரு ஷாட்டுக்கு நடிக்கிற நடிகை, ஆயிரக்கணக்கில் வாங்குகிருளே என்று தர்க்கம் செய்து பயனில்லை. அது வேறு இது வேறு.

நிறைய விரையம் செய்தால்தான் நிறையச் சம்பாதிக்க முடியும் என்கிறமாதிரி ஒருகல இது இங்கே சிக்கனம் பார்க்க விரும்புகிற நல்லவனை எல்லாருமாகச் சேர்ந்து நஷ்டப்படுத்தி விடுவார்கள், சுயவிரயத்தைச் சகித்துக் கொள்கிற மனப் பக்குவமே இதில் வெற்றி'-என்ற இரகசியம் அவருக்குப் புரிந்த பின் அவர் தேறியிருந்தார். .

பதினைந்து வருஷங்களுக்கு முன் தேவகோட்டையில் எஸ். பி. எஸ், சிட்பண்ட்ஸ் அதிபராயிருந்த சொ. ப. சொ. வேறு இன்றைய எஸ். பி. எஸ். வேறு. அன்றைய எஸ். பி. எஸ். அறவே மாறிவிட்டார் இப்போது, ஐம்பதிளுயிர ரூபாய் சலவை நூறுகளாக வாங்க நூற்று இருபத்தைந்து ரூபாய் வட்டம் கொடுக்க அன்றைய சொ. ப. சொ. துணிந்திருக்க மாட்டார். இன்று அப்படிப் புது நோட்டுக்களாகக் கொண்டு போய்க் கொடுப்பது ஒரு நடிகையை மகிழ்விக்கும் என்று புரிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்றித் தருவது தம் கடமை என்று புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும், இந்த ஞானம் தான் தொழிலில் அவருக்கு மேலும் மேலும் வெற்றியைக் கொடுத்தது என்று சொல்ல முடிந்தது. மார்க்கெட்டில் "எஸ். பி. எஸ். அண்ணன? ஃபார் ஹிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/35&oldid=565703" இலிருந்து மீள்விக்கப்பட்டது