பக்கம்:சுலபா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 35

ஹைட்பார்க் எதிரே இருந்த மார்பின் ஆர்ச் அருகிலுள்ள பிரபல கம்பர்லாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கினர்கள். மற்ற வர்கள் கொஞ்சம் உள்ளே பிக்காடில்லி சர்க்கஸ் அருகே ஓர் இரண்டாந்தர ஹோட்டலில் தங்கினர்கள். எல்லாமே வசதியாகத்தான் இருந்தன.

பகலில் ஹைட்பார்க்கில் கொஞ்சம் ஷல்ட்டிங் நடந்தது. சுலபாவும், கதாநாயகனும் டூயட் பாடியபடியே ஒடிப்பிடித்து விளையாடுகிருர்கள். பார்க்குக்கு உள்ளே இருந்த ஸெர்ப் பண்டைன்லேக்’கில் இருவரும் படகு செலுத்துகிற மாதிரி ஒரு ஷாட் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹைட்பார்க்கிலோ, ஏரியிலோ, பகலில் கூட்டமே இல்லை. இருந்த ஒரு சிலரும் இவர்களது ஷூட்டிங்கைத் திரும்பிப் பார்க்கக் கூடி இல்லை, பட்டிக்காட்டான்கள் யானை பார்க்கிறமாதிரி வடிவிட்டிங் பார்க் கக் கூடும் நம்மூர்க் கூட்டம் லண்டனில் இல்லாதது புதுமையாயிருந்தது. உள்ளுறக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. தங்களையோ தங்கள் படப் பிடிப்பையோ யாருமே பொருட்படுத்தவில்லை என்பதல்ை வந்த ஏமாற்றம் அது. கவனிக்கப்படாமல் விடப்பட்ட வருத்தம் உள்ளுற இருந்தது.

அதே போலப் பாரிஸில் ஈஃபில் டவர் அருகேயும் வார் ஸெயில்ஸ் அரண்மனை முகப்பிலும் படப்பிடிப்புக்கள் இருந் தன. பாரிஸில் இருந்தபோது ஒரே ஒரு நாள் ஆடிட்டரும், சுலபாவும் தலைமறைவானர்கள். காலை ஆறு மணிக்கே புறப் பட்டு ஜூரிச் போளுர்கள். அன்று முழுவதும் ஜூரிச்சில் கழித் தார்கள். பாரிஸிலிருந்து ஆடிட்டர் கனக சபாபதியின் உற வினர் ஒருத்தர் முந்திய தினமே ஜூரிச் சென்று எல்லா ஏற் பாடுகளையும் செய்து முடித்து விட்டு இவர்களை விமான நிலை யத்துக்கு வந்து அழைத்துப் போளுர், ஸ்விஸ்பாங்க் கணக்கு விவகாரத்தை முடித்துக் கொடுத்தார். பிற்பகலுக்குள் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/37&oldid=565705" இலிருந்து மீள்விக்கப்பட்டது