பக்கம்:சுலபா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 Յ:6):lց

வேலை முடிந்து விட்டிது, பிற்பகலுக்கு மேல் அங்கிருந்து ஜெனிவாவுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்து விட்டு மறுநாள் காலை ஜெனிவாவிலிருந்து பாரிஸ் திரும்பினர்கள்.

இந்தியாவில் இந்த மாதிரி அவள் இஷ்டம் போல் சுற்ற முடியாது. படிப்பிடிப்பு என்ருல் அது கிராமமாயிருந்தாலும் நகரமாயிருந்தாலும் கூட்டம் கூடிவிடும். இங்கே பாரிஸில் படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டு நின்ருலும், நீச்சல் உடையில் நடுத்தெருவில் நின்ருலும் சீந்துவாரிலலை. யாரென்ருே ஏனென்ருே பார்ப்பவர்கள் இல்லை, விசாரிப்பவர் கள் இல்லை. இப்படிக் கவனிக்கப்படாமலும் விசாரிககப்படா மலும், வியக்கப்படாமலும் இருந்ததில் நிம்மதி என்று இவர் களே சொல்லிக் கொண்டாலும் உள்ளுற ஆதங்கமாகத்தான் இருந்தது. டேய் சுலபா டோய்! -என்று காணுததைக் கண்டுவிட்டி மாதிரித் துரத்திக் கொண்டு ஓடிவரும் பாமரக் கூட்டம் இல்லாததில் உள்ளே ஏக்கமாக இருந்தாலும் வாய் என்னவோ, இங்கே ரொம்ப ஃப்ரீயா இருக்கு, ரசிகர்களோட டிஸ்டர்பன்ஸே இல்லை’-என்று சொல்லி மகிழ்வது போலப் பாசாங்கு செய்தது. சுற்றி இருப்பவர்களுக்குத் தங்களை யாரென்றே தெரியவில்லை. தாங்கள் யாரெனறு அவர்கள் கவலைப்படவும் இல்லை என்பது ஊமைக் காயமாக உள்ளே வலிக்கத்தான் செய்தது. தங்க்ளே வியந்து தொழாதவர்கள் மத்தியில் தாங்கள் இருக்கிருேம் என்பதைச் சிரமப்பட்டுத்தான் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. யாரும் 'ஆட்டோ கிராப்' கேட்கவில்லை. பொது இடங்களில் ஷாட்டிங் நடப்பதுகூட யாருடைய கவனத்தையும் கவரவில்லை. அடிவருடிகளும், துதி பாடிகளும், பிறரைக் கவனித்துக் கவனித்தே தம்மை மறந்து விடுவோரும் நிறைந்த இந்தியா மாதிரி இந்த நாடுகள் இல் லாதது புரிந்தது, யாரையும் யாரும் கவனிக்கவே மாட்டிே னென்கிருர்கள். அவரவர்கள் வேலையை அவரவர்கள் கவனித் தார்கள். மற்றவர்களைப் பார்த்துப் பொருமைப் படவும் வியக்க வும் யாருக்கும் நேரமோ அவகாசமோ இருந்ததாகத் தெரிய வில்லை. இது புதுமையாயிருந்தது. இந்திய இட்லி, இந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/38&oldid=565706" இலிருந்து மீள்விக்கப்பட்டது