பக்கம்:சுலபா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 $ 6R) HJE”

ஏற்ற இருபது தலைப்புச் செய்திகளை அழகாக எழுதிக் கோடுத்து வெளியிடும் பொறுப்பு-புரொடக்ஷன் மானேஜரிட மும் வசனகர்த்தாவிடமும் விடப்பட்டிருந்தது. அவர்கள் அதை ஜிஞ்ஜாமிர்தம் பண்ணினர்கள். வெளி நாட்டுப் படப்பிடிப் புக்கு விளம்பரம் கிடைத்துக் கொண்டிருந்தது.

ஊர் திரும்பியதும் மீதி உள்ள நாலைந்து ஷெட்யூல்களை முடித்து ரீரிகார்டிங், எடிடிங் பூர்த்தி செய்தால் சூட்டோடு சூடாகப் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம். ஏரியா விற்பனை முன்னைவிட அதிகமாக ஆகும். அதில் வருகிற லாபத்தைப் பார்க்கும்போது இந்த வெளிநாட்டுப் படப்பிடிப்புச் செலவு கொசுக்கடி மாதிரித்தான். சட்டப்படி கிடைத்த வெளிநாட்டுச் செலாவணி தவிரவே எஸ். பி. எஸ். முதல் சுலபா வரை வேறு தனிவசதிகளும் கைநிறைய இருந்தன.

ஜூரிச் அக்கவுண்ட், ஆம்ஸ்டர்டாமில் பதினறுகல் வைத்துத் தோடு கட்டுவதற்கு வைரம் எல்லாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடிந்தது.

அதிகம் பிரபலமாகப் பிரபலமாகச் சுலபாவுக்குள் அப்படி

ஒரு பிடிவாத குணம் வளர்ந்துவந்தது. தான் நினைத்தது நடக்க வேண்டும, அதுவும் நினைத்தபடியே பிசகாமல் நடக்க வேண்டும், அதற்குத் தடையாயிருப்பதை எல்லாம் நிர்மூல மாக்கிவிட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துகொண்டு வந்தது. எல்லார் நினைப்பதும் நடக்க வேண்டும். எல்லாரும் ஆசைப்பட வேண்டும். எல்லாரும் வாழ வேண்டும்’ என்று எண்ணி அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுவது ஜனநாயக மனப்பான்கை. 'தான் நினைப்பது மட்டும் நினைத்தபடி நடக்க வேண்டும்’-என்று எண்ணுவது சர்வாதிகாரம். உள்ளுக்குள் அவள் சர்வாதிகாரி போலத்தான் ஆகியிருந்தாள். சர்வாதி காரம் செல்லுபடி ஆயிற்று. சலாம் போட்டுக் கொண்டு அடிபணிந்தார்கள் இங்கே.

சலவை நோட்டாக வேண்டும்என்ருல் அப்படியே செண்ட் தெளித்து எடுத்து வந்து காலடியில் குவித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/40&oldid=565708" இலிருந்து மீள்விக்கப்பட்டது