பக்கம்:சுலபா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 避、欧伊

ருந்த அவர்களுக்கு இவள் கூறியதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. இவள் பாட்டை மாற்றச் சொல்லி வற் புறுத்தினுள்.

உங்களைத் தனிப்பட யாரும் நெனைக்க மாட்டாங்க மேடம்! அந்தப் படத்திலே நீங்க நடிக்கிற ரோலுக்கு அந்தப் பாட்டுப் பொருந்துதா இல்லியான்னு மட்டுமே பார்ப்பாங்க". என்று எவ்வளவோ சொல்லி வாதாடினர் பாடலாசிரியர், அவர் வாதத்தை அவள் ஏற்கவில்லை.

கதாசிரியரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இணைந்து மறுத்தனர். "சரி நாளைக்குப் பார்ப்போம்! போய் வாங்க'.என்று அவர்களை விடைகொடுத்து அனுப்பி விட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட சில தயாரிப்பாளர்களுக்கு அன் றிரவே ஃபேனில் தகவல் சொல்லிப் பேசிள்ை சுலபா. மூன்று பேருக்கும் அடுத்தடுத்துச் சில தயாரிப்புக்களுக்கான ஒப்பந்தங் கள் இரத்து ஆயின. ஒன்றும் புரியாமல் திணறி நடுநடுங்கிப் போளுர்கள் அவர்கள். விசாரித்ததில் அது சுலபாவின் வேலை என்று புரிந்தது. பிழைப்பைக் கெடுக்கிருளே என்று அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவளிடம் முறையிட்டார்கள். கெஞ்சிக் கேட்டு மன்ருடிர்ைகள்.

"இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை' - என்று சிரித்து மழுப்பிளுள் அவள். அந்தச் சிரிப்பில்தான் மர்மம் இருந்தது. எச்சரிக்கை இருந்தது. என்னிடமா வாலாட்டு கிறீர்கள்? - என்ற எச்சரிக்கை அதில் தொனித்தது. உடனே பாடலும் இசையும் மாறின. நாளுெரு பயித்தியக் காரி'-பாட்டு மாற்றப்பட்டது. தொழிலையும் பிழைப்பையும் காப்பாற்றிக்கொள்ளும் ஆத்திரத்தில் பாடலாசிரியர் சுல பாவை வாழ்த்தியே ஒரு பாடலைத் தனியாக எழுதி வந்து நேரில் அவளிடமே பாடி விட்டார், :

கலை பாராட்டும் கவிை போகே

கண் பார்த்துக் கருணை காட்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/42&oldid=565710" இலிருந்து மீள்விக்கப்பட்டது