பக்கம்:சுலபா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பச, 41

பல பாராட்டிப் பயனென்ன?

பகை பாராட்டி விளைவென்ன? நிலை மாருத பெண்ணரசி நித்தியமாம் நடிப்பரசி! சுலபாவைப் போலுண்டோ தொல்லுலகில்?

என்று பாடிச் சட்டிம் போட்டு வரவேற்பு இதழ் போல் கண்ணுடியிற் பொதிந்து தந்து அவளிடம் மன்னிப்பும் கேட்டார் பாடலாசிரியர். -

அதன் பின்புதான் இரத்து ஆன ஒப்பந்தங்கள் அவருக் குத் திரும்பக் கிடைத்தன. தான் நினைத்ததற்குக் குறுக்கே நிற்பவர்களை அவள்...பொறுத்து விட்டுக் கொடுத்ததே கிடிை யாது. எப்படியும் அவர்கள் பணிந்தே ஆக வேண்டும். அதற் கான காரியங்களை அவளால் செய்ய முடிந்தது. நிகழ்காலம் இப்படி நடந்தாலும் கடந்த காலத்தில் தன்னை எதிர்த்தவர் களைத் தேடிப் பழி வாங்க முடியவில்லையே என்கிற கவலை உள்ளுற அவளை வாட்டியது உண்டு. அப்படிப்பட்டவர்களை அவள் மறக்க முயன்ருள். ஆளுல் மறப்பது சுலபமாக இல்லை.

சினிமாவில் சேர்த்து விடுவதாக சென்னைக்கு அழைத்து வந்து தன்னை விபசார விடுதியில் விற்றுவிட்டு இரவோடு இர வாகத் தலைமறைவாகிப் போளுனே குப்பையரெட்டி அவன் இப்போது அகப்பட்டால் பழி வாங்கலாம். அல்லது பழியைத் தீர்த்துக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில்-எந்த நிலையில் எப்படி அவன் இருந்தாலும் இப்போது அவளால் பழி தீர்க்க முடியும். ஆளுல் அகப்பட வேண்டுமே? அவன் அகப்பட்டால் அவளால் எதுவும் செய்ய முடியும். சுலபr"வே ஒரு குணசித்திரமாகிப் போளுள். விரக்தி ஒரு புறமும், தன்னை எதிர்ப்பவர்களை வைரம் வைத்து அழிக்கும் குணம் ஒருபுறமு மாக அவள் விளங்கினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/43&oldid=565711" இலிருந்து மீள்விக்கப்பட்டது