பக்கம்:சுலபா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சுலபr

மனிதர்கள் மெல்ல மெல்ல அவளுக்குப் பயப்பட ஆரம் பித்தார்கள். பயம் மரியாதையைக் கொண்டு வந்தது. மரியாதை பயத்திலிருந்து விளைந்தது.

பயப்படாதவர்கள், எழுந்து நிற்காதவர்கள், தன்னைப் பார்த்ததும் பீடி குடிப்பதை நிறுத்தி விட்டுப் பதறிக் கை கூப்பாதவர்கள், எல்லாரையும் ஞாபகமாக வஞ்சம் தீர்க்கிற குணம் அவளுள் வளர்ந்தது. புற எளிமை என்பது ஒரு வேஷ மாக மட்டும் இருந்தது.

ஒரு வகையில் பார்த்தால் இது தாழ்வு மனப்பான்மை யின் விளைவுதான். தாழ்வு மனப்பான்மைதான் மறுபுறத்தில் ஆணவமாக உருவெடுக்கும். பயமும், அவநம்பிக்கையும்தான் வன்முறையாகவும் பிடிவாதமாகவும் வெளியே தெரியும். சுலபாவிடமும் அப்படித்தான் அவை தெரிந்தன.

சுலபா யாரையும் எதையும் நம்ப மறுத்தாள். எல்லார் மேலும் சந்தேகப் பட்டான். மற்றவர்களே நம்ப மறுப்பவர் களுக்குத் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அவளுக் கும் அப்படித்தான் இருந்தது.

புகழை அவள் வெறுத்தாள் என்ருல் அதற்குக் காரணம் புகழுகிறவர்கள் மேலெல்லாம் அவள் சந்தேகப் பட்டாவி, அவ ர்வர்கள் எப்படி எப்படி இருப்பார்களோ அப்படி அப்படித் தான் இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மறுத்து இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாளுக எதிர் பார்த் தான். அவள் எதிர்பார்த்தபடி மனிதர்கள் இல்லாதபோது அவளுக்குக் கோபம் வந்தது. தான் சொல்லியது தவருகவே இருந்தாலும் மனிதர்கள் அதைக் கேட்க வேண்டும். அதற்கு இசைந்து அதன்படி செயல்பட வேண்டும் என்று அவள் விரும்பினள், - - -

எதிர்த்துப் பேசுபவர்கள். அவள் யோசனை சரியில்லை என்ப வர்கள் மேலெல்லாம் கோபப்பட்டாள் சுலபா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/44&oldid=565712" இலிருந்து மீள்விக்கப்பட்டது