பக்கம்:சுலபா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 &6). If

மூத்தவருமான அந்தக் காமிராமேன் மறுநாளே அந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டார்.

பூக்கடையில் ஐந்து ரூபாய் செலவழித்துப் பாலிதின் உறையில் அழகாக அடுக்கிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொன்டு அவளைச் சந்திக்கப் போளுர் அவர்.

அவள் உள்ளே இருந்து கொண்டிே அலைக்கழித்தான்,

'உடம்பு சரியில்லை. இன்னிக்கி யாரையும் பார்க்க முடியாதாம்" என்று நரசம்மா மூலம் வேண்டுமென்றே சொல்லியனுப்பினுள். அவர் அசரவில்லை.

'இன்னிக்கி வெள்ளிக்கிழமை மங்கலமான நாள். பூங்கொத்தோடு பார்க்க வந்திருக்கேன். பார்க்காமப் போக மாட்டேன்னு சொல்லுங்க' என்ருச்.

நரசம்மா மறுபடி உள்ளே ஒடினுள். திரும்பி வந்து, "என்ன விஷயமாப் பார்க்கணும்னு கேட்கிருங்க" என்ருள்,

"ஒரு விஷயமுமில்லே. அவங்களுக்கு மரியாதை செலுத்திட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்”

அவள் உள்ளே போய்விட்டு மறுபடி திரும்பி வந்து, "ஒருமணி நேரம் ஆகும்! உங்களால அதுவரை வெயிட்” பண்ண முடியுமான்னு கேட்கிருங்க?' என்ருள்.

"ஒருமணியோ, ரென்டு மணியோ அவங்களைப் பார்த்து இந்தப் பூவைத் தராமல் நான் போகப் போறதில்லே'அவள் தன்னைப் பதம் பார்க்கிருள் என்று அவருக்குப் புரிந் தது. கயவர்களை அனர்களுக்குத் தோற்பதுபோல் போக்குக் காட்டி விட்டு அப்புறம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற உத்தி அவருக்கு நன்ருகத் தெரியும். . -

முதலில் சொன்னது போல் அவ்வளவு காலதாமதம் செய்துவிடாமல் மிக விரைவிலேயே அவரை உள்ளே கூப்பிட்டி னுப்பினுள் சுலபா. போனதும் பூங்கொத்தைக் கொடுத்து விட்டு அவளை இதமாகப் புகழ ஆரம்பித்தார் அவர். "இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/48&oldid=565716" இலிருந்து மீள்விக்கப்பட்டது