பக்கம்:சுலபா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னிக்கி இருக்கிற ஸ்டாருங்களிலேயே காமிராவுக்கு அதிர்ஷ்டி

மான முகம் உங்களுது தான்."

முதலில் அவள் நம்பவில்லை. பின்பு அவள் மெல்லமெல்ல

இளகினுள்.

"உங்க முதல் படத்திலேருந்து நான் பரம ரசிகன்.'

'ரொம்பப் புகழாதீங்க... ப்ளீஸ்".

'இந்தச் சமீபத்துக் காமிரா ஆங்கிள் பத்தின சண்டைகூட நமக்குள்ள அவசியமில்லாதது. ஏதோ என்போருத வேளைன்னு தான் சொல்லணும். அந்த ஆங்கிளைக் கூட நீங்க நினைக்கிற படியே மாத்திடலாம்’

வேண்டாம்! நீங்க மூத்தவர். அநுபவஸ்தர். உங்க விருப்பப்படியே விட்டுடலாம். தெரியாத்தனமா உங்களைத் தப்பாப் புரிஞ்சுக் கிட்டேன்' .

- 'நீங்க நினைக்கிறபடியே மாத்திடலாம் மேடிம். கவலைப் படாதீங்க...

‘'வேண்டாம்!பழையபடியே இருக்கட்டுங்க. நான் புரொட் யூஸர் கிட்டப் பேசிடறேன்'.

வந்த காரியத்தை ஜெயித்தாயிற்று. அவர் மேலும் சுலபா வைப் புகழ்ந்து அவள் ஆணவத்தின் கிளர்ச்சி நிலையில் தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்பினர். வெற்றி சுலப மாயிருந்தது.

சினிமா உலகைப் பொறுத்தவரை அவள் ஆணவத்தை அதுவரை யாரும் தட்டிக்கேட்கவில்லை. சினிமா அவளுக்குச் சேர்த்துக் கொடுத்திருந்த புகழும் செல்வமும் அந்த உலகிற்கு வெளியேயும் அவள் ஆணவம் செலாவணியாகும்படி செய்தி ருந்தது என்பதே உண்மை. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/49&oldid=565717" இலிருந்து மீள்விக்கப்பட்டது