பக்கம்:சுலபா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 , &#€\Xt;air

கடந்த காலக் கணக்கு என்ற பழைய பாக்கியில் குப்பையரெட்டி மட்டுமே மீதமிருந்தான். அவனைப் பழிவாங்க அவன் ஆள் அகப்படவில்லை. மேலே ஏறுவதற்கு உயரங்களே மீதமில்லாத அத்தனை உயரத்தில் இப்போது அவள் இருந் தாள். அதனல் தான் சலிப்பாயிருந்தது. முயற்சியும் ஊக்கமும் அற்றிருந்தன.

இன்னும் அடைவதற்கு என்று எந்த வசதியுமே மீதமில் லாத அத்தனை வசதிகளில் அவள் திளைத்துக் கொண்டிருந் தாள். அதனல் வாழ்க்கையைப் பற்றிய தாகம் எதுவுமே இல்லை. மந்தமாக இருந்தது.

உலகில் எல்லாரும் அவளைக் காதலித்தார்கள். அவள் காதலிக்க எதுவுமே யாருமே மீதமில்லைபோல் தோன்றியது.

சுலபாவுக்குச் சில மேல் வர்க்கத்துக் குடும்பத் தலைவிகள் சிநேகிதமாயிருந்தார்கள், அவர்களில் இரண்டொருவர் வீட் டுக்கு அவள் அடிக்கடி போவாள். அவள் வீட்டுக்கும் அவர் கள் வருவார்கள். மனம்விட்டுப் பேசுவார்கள்,

இப்படி அவர்கள் சந்திப்பின்போது பல விஷயங்களைப் பற்றிய பேச்சு வரும். ஆண்கள் யாரும் கூட இல்லாத சமயங் களில் பால் உணர்வு கவர்ச்சி-பிறரை மயக்கும் அழகு-எல்லாம் பற்றிக் கூட அவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிருர்கள். விவாதித்திருக்கிருர்கள்.

இத்தகைய சிநேகிதிகளில் ஒருத்திதான் கோகிலா. ஒரு சிமெண்ட் கம்பெனி உரிமையாளரின் நடுத்தர வயது மனைவி. படித்தவள். அவளும், சுலபாவும் தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. ஒரு முறை கோகிலா தன் கணவர் ஊரில் இல்லாத சமயமாகப் பார்த்துச் சுலபாவை டின்னருக்கு அழைத்திருந்தாள்.கோகிலா, சுலபா இருவருமே எப்போதா வது 'பிராந்தி' குடிப்பது உண்டு. கோகிலாவுக்குச் சுலபாவின் பழக்கம் இது எனத் தெரியும். நடித்துக் களைத்து வீடு திரும்பி ல்ை அயர்ந்து உறங்க இது தேவை என்று ஆரம்பித்து அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/50&oldid=565718" இலிருந்து மீள்விக்கப்பட்டது