பக்கம்:சுலபா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pr. Ery. 49

புறம் இது பழக்கமாகிவிட்டது. கோகிலா ஏதோ பிரசவத் துக்குப்பின் மருந்தாக ஆரம்பித்து அப்புறம் மேல்தட்டு சிநே கிதத்தில் பழக்க மாக்கிக் கொண்டுவிட்டாள். அர்பன் சொ ஸைட்டு ஹேபிட்டாக வந்துவிட்டது.

இவர்கள் தனியே சந்தித்த விருந்தின்போது இரண்டு ரவுண்டு சுகமான பிஸ்கட் பிராந்தி உள்ளே கதகதவென்று இறங்கியதும்-சூடு வேலை செய்தது.

கோகிலா சுலபாவைக் கேட்டாள்.

பார்த்தவுடன் இவனை அநுபவித்துவிடி வேண்டும் என்று எந்த ஆண்பிள்ளையாவது உன்னை நினைக்கச் செய்திருக் கிருளு?’’

"சினிமாவைப் பொறுத்தவரை அப்படி ஆசைப்பட்டு நினைக்க இடைவெளியோ அவகாசமோ கிடிையாது கோகிலா! புகழ்பெறுகிறவரை நீ ஆசைப்படி வாய்ப்பே கிடையாது. உன்னை ஆசைப்படுகிற வசதியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்கே நேரம் போய்விடும்'

ஆசை, காதல், இச்சை எல்லாமே வறண்டு போய்விடும் என்கிருயா?"

"மற்றவர்கள் அநுபவம் எப்படியோ, என் அநுபவம் அப்படித்தான். விரக்தி அடையும் அளவு நான் கசந்து போயி ருக்கிறேன். இப்படி முன்னுக்கு வர என்னைக் கசக்கிப் பிழிந் திருக்கிருச்கள்."

'நெஞ்சைத் தொட்டுச் சொல் சுலபா? இது உறுதி தான?"

"தற்போதுள்ள நிலைமையைச் சொல்கிறேன். எந்த ஆண்பிள்ளையும் எனக்கு அழகளுகத் தெரியவில்லை. யாரைப் பார்த்தாலும் மிருக இச்சையுள்ள ஓர் இயந்திரமாகவே கண்ணுக்குப் படுகிருன் கோகிலா. அந்த முதல் குப்பைய ரெட்டி தொடங்கி எல்லாருமே திருட்டுப் பயல்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/51&oldid=565719" இலிருந்து மீள்விக்கப்பட்டது