பக்கம்:சுலபா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 GSR7 für

ஏதாவது ஒன்றின் மேல் ஆசைப்படுகிறவர்களாக இருப்பார் கள் என்பது மனத் தத்துவம். பரிபூரணமான துறவிகள்தான் எதையும் வெறுக்காமல் விரும்பவும்-எதையும் விரும்பாமல் விட்டுவிடவும் முடிந்தவர்கள். நீ துறவியைப் போல் பேசு கிருய், ஆளுல் துறவியில்லே. பிஞ்சிலே பழுத்தவள்.ஐமீன் பழுக்க வைக்கப் பட்டவள். உன் வெறுப்புக்கள் மேலாக மிதப்பவை. அவை அப்படி மிதக்கக் காரணமான ஆசைகள் அடி நீராகத் தேங்கியிருக்கின்றன என்பதுதான் உண்மை’

'இதெல்லாம் எப்படிச் சொல்கிருய் கோகிலா? ஜோசியமா?’’

"ஃப்ராய்டிலிருந்து ஹக்ஸ்லி வரை எவ்வளவு படித்திருப்

பேன்? உன் மனசை அப்படியே எக்ஸ்ரே எடுத்து வைக்க என்னுல் முடியும்டி சுலபா?"

‘'நீ அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமில்லை கோகிலா! நான் மறைத்தால் தானே நீ எக்ஸ்ரே எடுக்க முயல வேண்டும்? நானே சொல்லி விடுகிறேன். உள்ளதை அம்படியே சொல்லி விடுகிறேன். என்னை இரத்தவெறி பிடித்த வள்-காமாந்தகாரி என்றெல்லாம் முடிவு செய்து விடாதே. உன்மையைச் சொன்ளேன் என்று மட்டுமே சந்தோஷப்படு! வேறுவிதமாக எண்ணுதே' -

'நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். சொல்லு! உண்மைகள் எப்படி இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவை. அவைகளை உண்மைகளாக மட்டுமே பார்த்துவிட்டு விலகிவிட எனக்குத் தெரியும்! உண்மைகளைப் பிரதிபேதம், பாடி பேதம் பார்த்து ஆராய எனக்குப் பைத்தியமில்லை"

"என்னுடைய அந்தரங்கம் குரூரமானது என்று நீ என்னைக் கேவலமாக நினைக்கலாம்"

"சந்தோஷங்கள் குரூரமானவை அல்ல, ஆனால் குரூா மான் ஆசைகள் இருக்க முடியும். அவற்றை விமர்சிப்பதற்காக நான் விளுவவில்லை...' - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/54&oldid=565722" இலிருந்து மீள்விக்கப்பட்டது