பக்கம்:சுலபா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 58

"என்னை முதல்முதலாக மற்றவர்கள் கெடுத்துப் பாழாக் கிய மாதிரி ஐம்புலன்களையும் அடக்கி ஆசைகளைக் கட்டுப் படுத்தி விலகி வாழும் இளைஞர்களாகத் தேடிக் கெடுத்துவிட வேண்டும் என்கிற வைரம் பாய்ந்த பழிதீர்க்கும் எண்ணம் என்னுள் அடிமனத்தில் உண்டு’ -

'உன்னைக் கெடுத்தவர்கள் பணத்தோடு வந்து அதைச் செய்தார்கள்’’

'உண்மை! அன்று என்னிடம் பணம் இல்லை. அழகு மட்டும் இருந்தது. நான் கெட்டேன். இன்று என்னிடம் பணம் இருக்கிறது. அழகு இருப்பதாக மற்றவர்கள் சொல்கிருர்கள். பணத்தைச் செலவழித்துப் பெண்களைத் தேடி வந்து கெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? பணத்தைச் செலவழித்து ஆண்களைக்கெடுத்துப் பழி தீர்க்க வேண்டும் என்று எனக்குள்ளும் ஒரு தணியாத வெறி உண்டு," -

"ஏற்கெனவே நீ சினிமா மூலம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிருய் என்று உனது கடுமையான விமர்சகர்கள் சொல்லலாம்'; . .

சொல்கிருச்கள். ஆனல் அதன் மூலம் பதித்து விட்ட திருப்தி எனக்குள் ஏற்பட வில்லையே?’ 3.

"அப்படியால்ை அந்த ஒரு திருப்திக்கு நீ கொடுக்க விரும்பும் விலை என்ன சுலபா?”

"ஆண்வர்க்கத்தைப் பழி வாங்கி முடித்து விட்டேன் என்ற திருப்தி கிடைக்குமானல் என் முழுச் சொத்துச் சுகங் களை இழக்கக்கூட நான் தயாராயிருப்பேன் கோகிலா! அதன் பின் வாழ்க்கையே கூடி எனக்கு அவசியமில்லை. என்னுடைய இலட்சியமே முடிந்துவிட்ட மாதிரி'...கண்களில் நீர் மல்கச் சொன்னுள் சுலபா. - -

乐一生

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/55&oldid=565723" இலிருந்து மீள்விக்கப்பட்டது