பக்கம்:சுலபா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S

மூன்ருவது ரவுண்டு பிராந்தியும் தீர்ந்தது. சிப்ஸை எடுத்து நீட்டினுள் கோகிலா. வறுவலை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட சுலபா இன்ளுெரு ரவுண்டுக்காக கிளாலை மீண்டும் எடுத்து நீட்டினுள் 'நாலாவது ரவுண்டா? உன் மனம் அதிக மாகக் குழம்பிப் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்"

"ஆமாம்! இன்னெரு ரவுண்டுதான் அதைத் தெளிவு படுத்தும்'

கோகிலா மறுக்கவில்லை. 'எல்லாப் பார்ட்டிகளிலும் ஹோஸ்ட் பாட்டிலே மூடி வைத்தபின் கிளாலை நீட்டுபவர் களால் ஹோஸ்டுக்கு லாபமே தவிர நஷ்டமில்லை. அப்படி விருந்தினஸ் கேட்டதைச் செய்கிற தங்கக் கம்பியாக இழுபடு வான. அவனுக்காக மூடிய சீஸ்ா மட்டுமல்லாமல் அவசிய மாயின் புதிய பாட்டில்களே திறககப்படலாம்'-என்று கோகி லாவின் கணவர் மாடிஸன் அவென்யூ வெளியீடான 'பிஸினஸ் பார்ட்டி அண்ட் காக்டெயில்'-என்ற புத்தகத்திலிருந்து அடிக்கடி ஒரு கொட்டேஷனை எடுத்துச் சொலலுவார். இப் போது கோகிலாவுக்கு அந்த மேற்கோள் நினைவு வந்தது. சுலபாவுக்கும் அது பொருந்தியது. х

அவளைப் பொறுத்தவரை இப்போது சுலபா கிளாலை நீட்டுகிருள். சுலபாவிடமிருந்து மேலும் புதிய விஷயங்கள் தெரியும என்ருல் அவளுககாகப் பழைய பாட்டிலின் மீதத்தை மட்டும இன்றிப் புதிய பாட்டில்களே திறக்கப்படலாம் எனகிற முடிவுக்கு வந்தாள் கோகிலா, . . . .

நவ நாகரிகமான டேபிள் மேனர்ஸ். எக்ஸிகியூட்டிவ் பார்ட்டீஸ், பற்றி நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை வீடு நிறைய வாங்கி அடுக்கியிருந்தார் அவள் கணவர். அதில் ஒரு புத்தகத்தில், "ஒரு புதிய பாட்டிலின் மூடியைத் திறப்பதலை ஒரு புதிய உலகின் கதவுகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/56&oldid=565724" இலிருந்து மீள்விக்கப்பட்டது