பக்கம்:சுலபா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 55.

திறக்கப்பட நேரிடலாம். அப்படி வேளைகளில் கஞ்சளுகி விடாதே. பாட்டிலைத் தாராளமாகத் திற. கிளாஸ்களை நிறை. லாபத்தை அடை' என்று கூட இருந்தது. சுலபாவுக்கு நாலா வது ரவுண்டு ஊற்றியபோது ஐந்தாவது ரவுண்டையும் எதிர் பார்த்துப் பாட்டிலே மூடாமலே வைத்திருந்தாள் கோகிலா. தான் மட்டும் கச்சிதமாக மூன்ருவது ரவுண்டோடு நிறுத்திக் கொண்டாள். என்னடி கோகிலா? உன் கிளாஸ் மட்டும் காலியாவே இருக்கு'- என்று சுலபா கேட்ட போது கூட, "உனக்கே தெரியும் டி சுலபா! நான் எப்பவுமே மூணு ரவுண் டோட நிறுத்திடுவேன்...மோர் ஒவர் டு டே ஐயாம் நாடி ஃபீலிங் வெல்...'-என்று சமாளித்தாள். கோகிலா இப்படிக் கூறியபின் சுலபா அவளை வற்புறுத்தவில்லை. ஆனல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவுமில்லை.

டிப்ளமேடிக் பார்ட்டி'களில் இப்படி ஒரு தரப்புக் கிளாஸை விட்டு விட்டு, எதிர்த் தரப்பு கிளாலை மட்டுமே நிரப்புவது ஒற்றறியும் முயற்சியாகக் கருதப்படும் என்பதும் அப்படி விருந்துகளில் எப்போது எத்தனை ரவுண்டு ஊற்றிலுைம் இருதரப்பு கிளாஸ்களிலுமே சம அளவில் ஊற்ற வேண்டும் என்பதும் மரபு. தொடங்கும் போதும் இருதரப்பு கிளாஸ்களிலும் டோஸ்ட் சொல்லி நிரப்பி உயர்த்திப் பிடிக்கி வேண்டும். முடிக்கும் போதும் அப்படியே முடிக்க வேண்டும். சுலபாவின் நிலையில் ராஜதந்திரம் எதுவும் இல்லை. அவளே அதிகம் பருக விரும்பினுள் அதிகம் பேசவும் முன்வந்தாள். உள்ளே போகப் போக நிறைய விஷயங்கள் வெளி வந்தன. தன்னை நம்பி விருந்துக்கு வந்த சிநேகிதியிடம் இப்படிச் சாராயத்தை வார்த்துப் பூராயம் அறிவது சரியில்லை என்று கோகிலாவுக்கே தோன்றிலுைம் அந்த அடக்கத்தை ஆசை வென்றது. சுலபாவின் அந்தரங்கங்களை அறியும் ஆசையைக் கோகிலாவால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலமைக்குப் பின் கோகிலா கேட்காமலே சுலபா விஷயங் களைக் கொட்டத் தொடங்கிள்ை. இவள் தடுத்தால் கூட நிறுத்தமாட்டாள் போலிருநதது. அத்தனை வேகத்தில் எல்லாம் பீறிட்டுக் கொண்டு வந்தன. z -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/57&oldid=565725" இலிருந்து மீள்விக்கப்பட்டது