பக்கம்:சுலபா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 57

"இது எச்சிற் பண்டம். நமக்கு வேண்டாம் என்கிற அலட்சியமும் திமிரும் கூடக் காரணமாயிருக்கலாம்"

அந்த அம்மை வடு மூஞ்சிப் பெண்கள் என்ருயே. அவர்கள் எச்சிற் பண்டம் இல்லையச?'

'இல்லை! அவர்கள் என் மாதிரி டைப் இல்லை. உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள். இவன் அழகுக்காக இவனை வட்ட மிட்டவர்கள்"

'உன் அழகை இவன் விற்கமட்டுமே விரும்பினுள் என்கிருயா சுலபா?"

"இவன் அழகன் என்று இவனிடம் இரகசியமாக வந்த

அழகற்ற பெண்களைக் கூட இவன் பயன்படுத்திக் கொன் டான்,'

"அதே சமயம் இவனே தேடிக் கண்டுபிடித்த அழகியான உன்னை நீ ஏழை, தாழ்ந்த பிரிவினள் என்பதற்காக மற்றவர் களுக்கு விற்ருன் என்கிருய்!'

"அவர்கள் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது. என் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது'

"அவர்களை இவன் பெண்ணுக மதித்தான். பெண்ணுக நடத்தினன். பெண்ணுக அநுபவித்தான். உன்னை மட்டும் வியாபாரப் பொருளாக விற்று லாபம் சம்பாதித்தான்'

"என்னை இரத்தமும் சதையுமுள்ள பெண்ணுகவே மதிக்க வில்லை அந்தக் கிராதகன்'

'உன் ஆதங்கம் புரிகிறது சுலபச1 ஒரு பெண்ணுக்கு ஆண் செய்ய முடிந்த அவமானங்களில் மிகப் பெரியது அவளைப் பெண்ணுகவே புரிந்து கொள்ளாமலிருப்பதுதான்’

"அவன் என்னை மானபங்கப் படுத்தியிருந்தால் கூடி

நான் திருப்திப் பட்டிருப்பேன். அதற்குக் கூட. நான் லாயக்கில்லாதவள் என்று அவன் அலட்சியம் செய்ததுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/59&oldid=565727" இலிருந்து மீள்விக்கப்பட்டது