பக்கம்:சுலபா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 &#60LIsr

கோகிலாவுக்கு அவள் மேல் பிரியமாகவும் இருந்தது. இரக்க மாகவும் இருந்தது. பெரிய பெரிய சாம்ராஜ்யப் பகைகளை விட இந்த அந்தரங்கமான காதல் பகை-அல்லது காமப் பகை கடுமையாகவும் பெரியதாகவும் உள்ளே மறைந்திருப்பது புரிந்தது.

10

"அவள் தான் இணையற்ற பேரழகி என்று ஒப்புக் கொண்ட எல்லாரையும் சுலபா மன்னிக்கத் தயாராயிருந் தாள். அழகில் அவளுடைய சுப்ரீமஸியை'க் கேள்வி கேட்கக் கூடியவர்கள் சர்ச்சை செய்யக் கூடியவர்கள் எல்லாரையும் அவள் வெறுத்தாள். விரோதித்துக் கொள்ளக் கூடத் தயாரா யிருந்தாள். காமிராமேனிடம் கூட முதலில் அவளுக்கு ஏற் பட்ட விரோதம் பின்பு அவர் நேரில் வந்து உங்களைப் போலக் காமிராவுக்கு அழகான முகம் வேற இல்லே'-என்று புகழ்ந்த வுடன் மாறிவிட்டது. மன்னித்து விட்டாள்.

சுய கர்வத்தை மிதக்கச் செய்கிற தாழ்வு மனப்பான்மை அவளுள்ளே நிரம்பியிருந்தது. அந்தத் தாழ்வு மனப்பான்மை மட்டும் உள்ளே நிரம்பியிராவிட்டால் அவளுடைய கர்வம் மேலெழுந்து நிற்காமல் போயிருக்கும்,

தன் வேலைக்காரர்கள் கீழ் நிலையிலுள்ளவர்கள், ஊழியம் புரிகிறவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவது அவளுக்குப் போதையூட்டியது.

அதை அவள் விரும்பிளுள். குப்பையரெட்டி அவளே அன்று ஒரு மனுவியாகவே மதிக்கவில்லை. இன்ருே பலர் அவளைத் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினர்கள்.

என்ன மதிப்பு இன்று வந்தாலும் குப்பையரெட்டி அன்று மதிக்காததும் சேர்த்தேதான் நினைவு வந்தன. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/62&oldid=565730" இலிருந்து மீள்விக்கப்பட்டது