பக்கம்:சுலபா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. ur. 61

மறக்கவே முடியவில்லை. ஆருத வடுவாக அது உள்ளே இருந்தது.

சினிமா சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் பெண்கள் கலி யாணமாகிப் பார்க்க வந்தால் அவர்கள் விழுந்து கும்பிட்டு ஆசி கேட்கிருர்களா இல்லையா என்று கவனித்தே அவர்களுக் குத் தான் செய்ய வேண்டியதைச் செய்தாள். இதுபற்றிக் காரியதரிசி கவிதாவுக்கு ஸ்டான்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருந்தன. நம்பர் டு கணக்கு ரொக்கத் தொகையிலிருந்து நூறு ரூபாய் உறையிலிட்டது, ஐநூறு ரூபாய் உறையிலிட்டது என இரண்டு கவர்களைத் தயாராக வைத்திருப்பாள் கவிதா.

தேடிவந்த மணமக்கள் காலில் விழுந்து கும்பிட்டால் எஜமானியிடம் ஐநூறு ரூபாய் உறையை நீட்டுவாள். காலில் விழுந்து கும்பிடாவிட்டால் வெறும் நூறு ரூபாய் உறைதான். கவிதாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தபோது சுலபா அதில் ஆர்வமே காட்டாதது போல நடந்துகொண் டாள்.

"அவசரப்பட்டுக் கல்யாணம் கிலியாணம்னு ஆம்பிளையோட மாட்டுத் தொழுவத்திலே தாலிக் கயிற்ருலே கட்டப்பட்டு உள்ளே போயிருதே. உன் சுதந்திரம் எல்லாம் பறிபோய் நிற்கப்போறே - என்று சுலபா கூறியபோதே திருமணங் களின் மேலும் ஆண்களின் மேலும் அவளுக்கு இருந்த வெறுப்பும் ஆத்திரமும் புலப்பட்டன.

தான் கலியாணம் செய்து கொள்வதற்கு முன்பே சுலபாவிடி மிருந்து விலகிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொள்வ துண்டு. கலியாணத்திற்குப் பின் சுலபாவிடம் வேலை பார்ப்பது மிகவும் சிரமம் என்று கவிதா தனக்குத் தானே புரிந்து கொண்டிருந்தாள். சுலபாவும் ஜாடைமாடையாக அதைத் தெரிவித்திருந்தாள். - -

பெண்களை அவமானப் படுத்தருங்க, அலட்சியம் செய்யிருங்க, கொடுமைப் படுத்தருங்க, கேவலப் படுத்தருங்க...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/63&oldid=565731" இலிருந்து மீள்விக்கப்பட்டது