பக்கம்:சுலபா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சுலபr

கொத்தடிமை மாதிரி வேலை வாங்கருங்க. பிள்ளை பெறுகிற மிஷின் மாதிரித் தேய்த்துத் துரு பிடிக்க விடருங்க, கொஞ்சம் முதுமை வந்ததும் புறக்கணிக்கிருங்க...இத்தனை பண்ணியும் எந்தப் பொம்பிளையும் ஆம்பிளை கையாலே தாலி கட்டக் கழுத்தை நீட்டிக்கிட்டு ஒடறதை இன்னும் நிறுத்தலே. ஆம்பிளைகிட்ட அப்பிடி என்னதான் மயக்கமோ தெரியிலே'என்று கடுமையாக விமர்சிப்பாள் சுலபா.

கவிதா இவற்றையெல்லாம் விமர்சிக்காமல் விவாதிக் காமல் பொறுமையாகக் கேட்டுக் கொள்வாள். விவாதிப்பதும், விமர்சிப்பதும் எஜமானிக்குப் பிடிக்காதவை என்பதுதான் காரணம். X

இந்தப் போக்கைப் பற்றி எஜமானியின் பொருளாதார ஆலோசகரும், தன் மாமாவுமான கனகசபாபதியிடம் மெது வாகப் பலமுறை பிரஸ்தாபித்து விவாதித்திருக்கிருள் கவிதா

கவிதாவைப் போன்ற திருமணமாகாத ஒர் இளம் பெண்ணிடம் எந்த அளவு இதற்கு விளக்கமாகப் பதில் சொல்லலாமோ அந்த அளவு கனகசபாபதியும் பதில் சொல்லி யிருந்தார். .

வரவர இப்படிப் புகார் கவிதாவிடம் இருந்து அதிகம் வந்தது. .

"எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிப் போரடிக் கிருங்க! அத்தனை ஆம்பளைங்களும் நரமாமிச பட்சிணிங்கிருங்க, அதுக்கு நான் உடனே கைதட்டி சபாஷ் சொல்லணும்னும் ஆசைப்படருங்க மாமா! ஒரே ரோதனையாப் போச்சு...' -

இந்த விஷயத்திலே அவள் ஒரு சைக்காலஜிகல்மித்'அதாவது மைேதத்துவப் புதிர் கவிதா, ஃபெமினிஸ்ட்"னுகூட ரொம்ப கெளரவமாகச் சொல்லிவிட முடியாது. இதில் அவளை நாம மாத்தறது முடியாத காரியம். நமக்கு ஒத்து வர்ா வரை இருக்கலாம். பிடிக்கலைன்ன முதல்நாள் சொல்லிட்டு மறு நாளே ஒதுங்கிக்கலாம்...தப்பில்லே .. கிட்டத்தட்டி அலுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/64&oldid=565732" இலிருந்து மீள்விக்கப்பட்டது