பக்கம்:சுலபா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுநாள் அவள் வேலைக்குப் போனபோதும் நாகரிகம் இல்லாமல் அவள் மனசு புரியாமல் சுலபா அதே பேச்சை மீண்டும் தொடங்கிள்ை.

‘ஏண்டீ யாரோடவோ சுத்தறியே? உன் அங்கிளுக்குத் தெரியுமாடீ? இதெல்லாம் ஏதாவது வம்புலே கொண்டுபோய் விட்டுடப் போவுது? ஜாக்கிரதை'-என்று சுலபா தேவை யின்றித் தலையை நுழைத்து உரிமை எடுத்துக் கொண்டது கவிதாவுக்கு அறவே பிடிக்கவில்லை. எஜமானி பத்து வாக்கியம் பேசினுல் கவிதா பதிலுக்கு அரை வாக்கியம் சொன்னாள்.

"'என்ஃபிரண்டு ரொம்ப நல்லவரும்மா...அங்கிளுக்குத் தெரியும்’-என்று பதில் சொல்லிவிட்டு வழக்கமான வேலை களைக் கவனிக்கத் தொடங்கினுள். தான் அதுபற்றி விசாரிப் பதே கவிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சுலபா புரிந்து கொண்டாள். அதனல் அவளது ஆத்திரம் மேலும் அதிக மாயிற்று. அவள் தன்னைப் பொருட்படுத்தவில்லையோ என்று எண்ணியதும் சுலபாவின் ஈகோ கிளர்ந்தெழுந்து விசுவ ரூபம் எடுத்து விட்டது. காதல் விஷயத்தில் தலையிடிவோ அட்வைஸ் கூறவோ உனக்கென்ன யோக்கியதை?'-என்ப தாகக் கவிதா தன்னைப் பற்றி எண்ணுகிருளோ என்று சந்தேகம் வந்தவுடன் சுலபாவின் ஆணவமும் ஆத்திரமும் சீறிப் படம் எடுத்தன; சுலபா ஆடிம்டிருக்கு ஃபோன் செய்து பேசிள்ை. "லீவு போட்டுட்டு எவனே கண்டிவனேடி எல்லாம் சுத்திக்கிட்டிருக்காளே?--என்று தடலடியாகப் பேசிள்ை. ஆடிட்டிருக்கே சுலபா பேசிய விதம் பிடிக்கவில்லை.

ஆடிட்டர் சொன்னர்:"இதெல்லாம் நாம ஒன்னும் கன்டிக்க முடியாது சுலபா. சுவிதா இந்தக் காலத்துப் பெண்...ஒருத்தர் சொல்லிக் கேட்கிறவள் இல்லே இப்ப முளைச்சதுகள் எல்லாம் அடங் கவச செய்யிது?’’

அவள் இந்தக் காலத்தவள் என்று கனகசபாபதி சொல்லிய விதத்திலிருந்து தன்னை ஹைதர் காலத்து மனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/67&oldid=565735" இலிருந்து மீள்விக்கப்பட்டது