பக்கம்:சுலபா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுலபா



1
        சுலபாவுக்குக் காரணமே புரியாமல், சலிப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது. எல்லாப் புகழுரைகளும் வர்ணனைகளுமே பொய்யாகவும், புளுகுகளாகவும் தோன்றின.
        தன்னுடைய காரியதரிசி கொண்டுவந்து கொட்டிய கடிதக் குவியல்களில் ஒன்றிரண்டிை எடுத்துப் படித்ததுமே திகட்டியது. அலுப்பூட்டியது, குமட்டிக் கொண்டு வந்தது. 'அழகுப்பெட்டகமே! ஆரணங்கே! பழகுத்தமிழே! பைங்கிளியே...உன்னை மணந்து கொள்ளத் துடிக்கிறேன்'-என்று புலம்பியது முதற் கடிதம். 
        'வாழ்ந்தால் வசந்தம், படத்தில் கதாநாயகியாக வந்து கல்லூரி வகுப்பறையில் நீங்கள் நடித்திருக்கும் காட்சி 'சுபர்ப்' அந்தக் கல்லூரியில் நான் ஒரு மாணவனாக இல்லையே என்று ஏங்குகிறேன்.'
        -என்று எழுதியிருந்தான். அடுத்த இரசிகன். ஏங்கவும், உருகவும், செய்யாத இயல்பான கடிதங்கள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாக் கடிதங்களும் ஏங்கின அல்லது அவளுக்காக உருகின.
        சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் இப்படி நாலைந்து கடிதங்கள் தபாலில் கிடைத்தால் கூடிப் போதை-புகழ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/7&oldid=1227724" இலிருந்து மீள்விக்கப்பட்டது