பக்கம்:சுலபா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சுலபr

அது நிச்சயமாக சாத்தியம் கவிதா! நாம் மறந்து விடு வதனால் நமது இளமையும் அழகும் குன்றிவிடப் போவதில்லை. தான் அழகு என்று இடைவிடாமல் நினைத்து அதையே எண்ணி மாய்ப்பவர்கள்தான் மூத்துப் போகிருர்கள். ஞாபக மில்லாமல் விடப்படும் எந்த அழகும் அப்படி மூப்பதில்லை. கவனித்துப் பராமரிக்கப்படும் எத்தனை மல்லிகைப் பதியன்கள் பூக்காமலே போகின்றன! யாரும் கவனிக்காத எத்தனை வன மல்லிகைகள் தாமாகப் பூத்துக் கொட்டுகின்றன"- ;

அவரது வாதம் சரியாகவே இருந்தது. அவள் மறுத்துப் பேசவில்லை. சுலபாவிடம் வேலைக்கு ஒப்புக்கொள்ள இசைந் தான்.

பழைய இந்த விவாதங்கள் எல்லாம் இப்போது கவிதா வுக்கு மீண்டும் நினைவு வந்தன. சுலபா வின் குணசித்தி ரத்தை மாமா கனக சபாபதி எத்தனை கனகச்சிதமாக எடை போட்டு முடித்திருக்கிருர் என்று உணர்ந்தபோது கவிதாவுக்கு வியப்பாகவே இருந்தது. - -

வெறும் உடல் நோயாளிகளிடம் கூடி நர்ஸாக இருந்து விடலாம். அது மிகவும் எளிய காரியம். தாங்கள் நோயாளி கள் என்று தாங்களே உணராத மன நோயாளிகளிடம் உதவி யாளராயிருப்பது பயங்கரமானது. தான் ஒரு மனநோயாளி என்பது சுலபாவுக்கே தெரியாது. அதை அவளுக்குத் தெரி விக்கவும் கூடாது. அவளுடைய அழகுக்கும், ஆரோக்கியத் துக்கும் கவிதாவே அடிக்கடி நற்சான்றிதழ் கொடுக்கிற காரி யத்தையும் செய்தாக வேண்டியிருந்தது. சிரமமாகத்தான் இருந்தது. சுலபாவின் முரண்டுகளுக்கும் அறியாமைக்கும் ஏற்ப இசைந்து பழகுவது கவிதாவுக்குப் பழகி இருந்தாலும் சமயாசமயங்களில் ஒரே மேக்காலில் ஒரு நொண்டிமாட்டோடு சேர்ந்து இழுக்கிருற்போல உணர்ந்தாள் கவிதா.

கவிதாவுக்கு ஆங்கிலமும் இந்தியும் நன்ருகப் பேசவரும். சுலபாவுக்குத் தெலுங்கும் தமிழும் மட்டுமே வரும். ஆங்கிலம் வராது. இந்தி தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/70&oldid=565738" இலிருந்து மீள்விக்கப்பட்டது