பக்கம்:சுலபா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 S6)LIF

ஆளுல் கவிதா எபபோதாவது தானே சுயேச்சையாகச் சுலபாவுக்குத் தெரியாத சில விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று தற்செயலாகக் காட்டிக் கொள்ள முயன்ருல் கூடி அவளுக்குப் பொறுக்காது, கோபம் வந்துவிடும்.

"உனக்கு எல்லாம் தெரியுது..இங்கிலீஷ்லே பேசலாம்

இந்தியிலே பேசலாம்கிற திமிர்டீ -என்று சுரீர் என ஆரம் பித்து விடுவாள்,

முதல் முதலாகச் சுலபாவுக்கு இந்தியில் டுப்குரல் கொடுக்கக்கூடக் கவிதா'வையே ஏற்பாடு செய்யலாம் என்று யோசனை கூறினர் ஒரு தயாரிப்பாளர். ஏனென்ருல் கவிதா வின் இந்தி நன்ருயிருந்தது. கொஞ்சம் முயன்று ஒர் இந்தி ஆசிரியரை விட்டுப் பழக்கிளுல் அவள் வடநாட்டுக்காரர் களைப் போலவே சகஜமாக இந்தி பேசுவாள் என்று தோன்றி யது. சுலபாவுக்கோ இந்தி உச்சரிப்பு அறவே வரவில்லை. கவிதாவுக்குக் கூடக் குரல் தானம் செய்ய ஆசை தா.ை அது தானமுமில்லை. கணிசமான வருமான மும் கிடைககும் என்று தெரியவந்தது. சுலபா என்ன நினைத்தாளோ எப்படிப் புரிந்து கொண்டாளோ. கடைசி நிமிஷத்தில் அந்தத் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு, 'கவிதாவைத் தொந்தரவு பண்ணுதிங்க... நல்லா இந்தி பேசற ஒரு வடக்கத்திப் பொண்ணையே குரலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். இதில் கவிதாவுக்கு ஏமாற்றம் தான்.

மாமாவிடம் போய்ச் சொன்னாள்: "எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும்! இந்தி பேச வராத வேற சில ஆர்ட்டிஸ்ட் டுக்கும் குரல் கொடுக்கக் கூப்பிடுவாங்க! என் குரலும் உச்சரிப்பும் பிரமாதமா சூட்" ஆகும்னு அவங்களே டெஸ்ட் பண்ணி முடிவு சொல்லிட்டப்ப இவ திடுதிப்னு குறுக்கிட்டுக் கூடாதுன்னுட்டாளே?’’

நல்ல வேளை! நீ தப்பிப் பிழைத்தாய். அவளுக்குப் பிடிக்காததை நீயாக ஒப்புக் கொண்டு செய்ய ஆரம்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/72&oldid=565740" இலிருந்து மீள்விக்கப்பட்டது