பக்கம்:சுலபா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

för. Eir. 71

அப்புறம் சித்திரவதை அநுபவிப்பதைவிட முதலிலேயே விட்டுப் போனதற்காகச் சந்தோஷப்படு' என்றார் மாமா.

இவை எல்லாம் அநுபவங்கள் என்ருலும் கவிதாவின் ஏமாற்றங்களைப் படிப்படியாக வளர்க்க இவை போது மானவையாக இருந்தன. எஜமானியின்விரக்தி வெப்பத்திற்கு அருகிலேயே தொடர்ந்து இருந்தால் தானே வாடிக் கருகி விடுவோமோ என்ற எண்ணம் கவிதாவுக்குள் வளர்ந்தது. எஜமானியின் ஈகோவை நிறைவு செய்யத் தன் ஈகோவை வலிந்து அடக்குவது கவிதாவுக்கே பிடிக்கவில்லை.

I 2

கோகிலா சுலபாவுக்கு ஃபோன் செய்தாள். தன் விருந்துமுறை முடிந்து சுலபாவின் தரப்பிலிருந்து ஒரு விருந்து பாக்கியிருந்தது. அதை அப்படிக் கடன் பாக்கியை வசூலிப்பது போல் வலிந்து கேட்டுப் பெற முடியாது. கூடவும் கூடாது. ஆனல் சுலபாவுக்கு எப்படியாவது நினைவுபடுத்த வேண்டும்தான். அதற்கு ஆயிரம் வழிகள் இருந்தன. டுயிங் நைலெஸ்ட் திங்க்ஸ் இன் நாஸ்டியஸ்ட்வே' என்பதையே மாற்றி டுயிங் நாஸ்டியஸ்ட்திங்ஸ் இன் நைஸெஸ்ட்வே: எனப் பழகியிருந்தாள் கோகிலா. மோசமான விஷயங்களை நாகுக்காக ஆரம்பித்து முடிப்பது கோகிலாவுக்குக் கைதேர்ந்த கலை. -

"என்ன சுலபா! உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆனுப்ல இருக்குடீ... எப்ப்டி இருக்கே? ஒருபத்திரிகையிலே உன் பாரிஸ் படப்பிடிப்பு அநுபவம் பற்றிப் பார்த்தேன்... நல்லாச் சொல்லி யிருந்தே' என்ருள் கோகிலா. புரிந்து கொண்டு பதில் சொன்னுள் சுலபா: "எனக்கு இந்த சண்டே ஈவினிங் நைட்எல்லாம் ஃப்ரீ கால்வீட் இல்லாமே ஃப்ரீயா வச்சுக்கிட்டிருக் கேன். சண்டிே டின்னருக்கு இங்கே வந்துடேன்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/73&oldid=565741" இலிருந்து மீள்விக்கப்பட்டது