பக்கம்:சுலபா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 &#69 off

என்னைத்தவிர வேற யாராவது வராங்களா? நாம ரெண்டு பேர் மட்டும்தானா?”

வேற நம்ம ஃபிரண்ட்ஸ் யாரையாவது கூப்பிடணும்னச் சொல்லு கூப்பிடறேன். எனக்கு யாரும் வேண்டாம்னு படுது. நாம பலதும் மனசுவிட்டுப் பேசுவோம். உன் இரகசியங் களை நீ மறைக்காமல் என்னிடம் சொல்லுவே. என் இரகசியங் களை நான் மறைக்காமல் உன்னிடம் சொல்லுவேன். பிடிச்சால் இஷ்டம் போலக் கூடி ரெண்டு ரவுண்டு பிஸ்கம் சாப்பிடு வோம். மத்தவங்களைக் கூப்பிட்டோம்ன இதெல்லாம் வம்பு ஆயிடும்’

  • சரியாச் சொன்னேடி சுலபr! என் sarrugih தான். நம்ம அந்தரங்கங்கள் நம்மோட இருக்கினும். மத்த வங்க மூலமா அநாவசியமா வெளியேறிடப்பிடாது'

"அப்ப நீ மட்டும் வா போறும். டிரைவர்கூட வேணும்... வழக்கம்போல் நீயே ஸெல்ஃப்’ எடுத்துக்கிட்டு வந்துடு கோகிலா! இல்லாட்டி நானே வண்டி அனுப்பட்டுமா?’’

வேண்டியதில்லை சுலபா புது மாருதி வந்தப்புறம் இவர் அதை என் டிஸ்போஸல்லியே விட்டுட்டார். சொந்தமா ஒட்டிக்கிட்டு வர்ரத்துக்கு ரொம்ப சுகமா இருக்கு'

"நான் கூட ஒரு மாருதி ஏ.சி.டீலக்ஸ் மாடிலுக்கு ஏற் பாடு பண்ணச் சொல்லியிருக்கேன். பெட்ரோல் நெறையக் குடுக்குதுங்கிருங்க..."

டேங்க் ஃபுல் பண்ணிட்டாப் பத்துப் பன்னண்டு நாள் கவலையில்லாமே இருந்துடலாம்'

இப்ப விற்கிற பெட்ரோல் விலையில அது பெரிய காரியம்டி கோகிலா -

"அப்படி எங்களை மாதிரி மனுஷா கவலைப் படிறது நியாயம்டி சுலபா உனக்கென்ன வந்தது? கடிலாக் ஒட்டிப் பெட்ரோல் செலவழிச்சாக்கூடக் கவலையில்லே! கோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/74&oldid=565742" இலிருந்து மீள்விக்கப்பட்டது