பக்கம்:சுலபா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 帶&舅戲

தாலும் அவள் கவர்ச்சி பிரமாதமாயிருந்தது. நல்ல சண்பகப் பூவின் மேனி நிறம், சிரிப்புக்கு மட்டுமே கனகாபிஷேகம் செய்யலாம் போல அத்தனை அழகான பல்வரிசை. எதிரே நிற்பவர்களைச் சுருட்டி விழுங்கும் சிரிப்பு. மோகனமான கன்கள். உல்லாசமான இந்த விழிகளுக்கும், புன்னகைக்கும் அப்பால்தான் விரக்தியும், வெறுப்பும் மறைந்திருக்கின்றன என்பதைச் சத்தியம் செய்து சொன்னல் கூட நம்புவது சிரமமா யிருக்கும். இப்படிப் பட்டவளிடம் போய்க் கோகிலா லெஸ்பியன்’ என்ருல் என்ன புரியும் இவளுக்கு?

ஃபோனில் பேசிய மறுதினம் நேரில் பார்த்த போது கோகிலா லெஸ்பியனிலம் பற்றி இவளிடம் விவரித்ததும் இவள் சிரித்தாள். கேலியாகக் கேட்டாள்:

'அந்த மாதிரிக் கூட உண்டா என்ன?"

'அந்த மாதிரி மட்டும் என்ன? அதற்கு நேர் மாருக இந்த மாதிரியும் கூட உண்டுடி'- என்று லெஸ்பியனிஸத் திற்கு நேர் மாருனதைக் கோகிலா விவரித்தபோதுகூட எல்லாம் தெரிந்த குருநாதர் முன் சிஷ்யை கேட்பது போல் அடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தாள் சுலபா, கோகிலா கூறுபவை இவளுக்குப் புதியவையாயிருந்தன.

ஆளுல் இதெல்லாம் கோகிலாவும் சுலபசவும் பழகத் தொடங்கிய புதிதில்தான். நாளாக நாளாக நிறைய இரக சியங்களே- நிறைய விஷயங்களைக் கோகிலாவிடம் பழகிப் பழகியே தெரிந்து கொண்டாள் சுலபா. கோகிலாவைப் போல ஒரு படித்த- எந்தப் போக்கிரித்தனத்துக்கும் துணிந்த மேல் வர்க்கத்துப் பெண்ணின் நட்பு சுலபாவுக்கு அவசியமாயிருந் இது அந்த நட்பு இதமாகவும், சுகமாகவும், தேவையான தாகவும் இருந்தது. கோகிலாவும் இவளும் சந்திக்கத் தவறிய வாரக் கடைசிகளே அநேகமாக இராது. இருவரும் ஒருவர் மனசுக்குள் இருப்பதை இன்ஞெருவரிடம் கொட்டித் தீர்த்து விடுவார்கள். பாரம் குறைந்த மாதிரி உணர்ந்த பின்பே இருவருக்கும் திருப்தி ஏற்படும். இப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/80&oldid=565748" இலிருந்து மீள்விக்கப்பட்டது