பக்கம்:சுலபா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8% 母@Ls”

நாமே அந்தரங்கமாக உடைமாற்றுவது போல் அவற்றை இரகசியமாகக் களைந்துவிட்டு மறுபடி வேஷம் போடுகிருேம். இந்தியர்களின் பொதுக் குணங்களில் இதுவும் ஒன்று சுலபா ! ஓர் ஃபிரெஞ்சுக் காரனே, அமெரிக்களுே இப்படி வேஷம் போடுவது மில்லை. களைவதும் இல்லை. நாம் இரண்டையுமே அடிக்கடி செய்கிருேம். வேஷம் போடுகிருேம். களைகிருேம். மோஸ்ட் ஆஃப் த இண்டியன்ஸ் ஆர் ஸ்பிளிட் பெர்ஸ்ளு லிட்டீஸ்...'"

"என்னைப் பொறுத்தவரை வேஷம் போடுவதும் களை வதும், கலைப்பதும் மறுபடி புதுவேஷம் போடுவதும்தான் என் தொழில் கோகிலா!' -

"நம் நாட்டில் வேஷம் போடுபவர்கள் யார் என்பது கேள்வியில்லை. வேஷம்போடிாதவர் யார் என்பது தான் கேள்வி. மேக்கப் இல்லாமலே சகஜமாக வேஷம் போடுவதைப் பிறவிக் குணமாகப் பெற்ற கோடிக் கணக்கான மக்கள் உள்ள நாட்டில் நாம் வாழ்கிருேம்டி சுலபா!'

"கொஞ்சங் கூடத் தேசபக்தியே இல்லாமல் இப்படி உன் சொந்த நாட்டையே வேஷதாரிகளின் தேசம் என் கிருயேடீ? இது உனக்கே நன்ருயிருக்கிறதா கோகிலா?'

தேசபக்தி வேறு! ஆத்ம பரிசோதனை வேறு. இந்தக் கடுமையான விமரிசனம் ஆத்ம பரிசோதனைதான், வேஷம் போடுவதும், இரகசியமாகக் களைவதும், பிறகு புது வேஷம் போட முயல்வதும் நமது தேசிய குணங்களில் தலையாயது'

"நீ ஒருத்தியாவது இந்தத் தேசத்தில் விதிவிலக்காக

இருக்கிருயே? அது போதாதாடி'

"இருக்கிறேன்! ஆனல் எங்கே என்னை കൊ-urs് காட்டிக் கொள்ள முடிகிறது. நானும் வேஷம் போடத்தான் வேண்டியிருக்கிறதடி சுலபா நம் சமூக அமைப்பு அப்படி! நான் வெளிப்படிையாக எல்வேஷங்களைக் களைந்து நினைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/84&oldid=565752" இலிருந்து மீள்விக்கப்பட்டது