பக்கம்:சுலபா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 83

பதைப் பேச ஆரம்பித்தால் அப்புறம் என்னைப் பற்றி என்ன சொல்லுவாங்க தெரியுமா? கோகிலா சரியான திமிர்பிடிச்ச பொம்பளை வீ இஸ் அப்டு எனிதிங்’னு கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க, நம்முரைப் பத்தி எனக்கு நல்லாவே, தெரியும்டி சுலபா!'

14

கோகிலாவுடன் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சுவாரஸ்யமாகத் தொடரும், சுலபா அந்த உரையாடல் சுகத்தை அநுபவிப்பதற்காக 'கால்விம்களை" இரத்துச் செய்திருக்கிருள். பல்லாயிரக் கணக்கில் செலவழித் துப் போடப்பட்ட "செம்’களையும் யூனிட் ஏற்பாட்டையும் மறந்து படப்பிடிப்புக்குப் போகாமல் உரையாடல் சுகத்தில் ஈடுபட்டிருக்கிருள் மனிதர்கள் அறிய ஆசைப்படும் இரகசியங் களும், விவரங்களும் தெரிந்த விரும்பத்தக்க கான்வர் சேஷனலிஸ்ட் கோகிலா ஒருத்திதான்,

கோகிலாவின் அந்தரங்கலைப்ரரியில் பாலியல் பற்றிய புத்தகங்கள் மட்டுமில்லை. வீடியோ டெக்கும் பாரிஸ், கோபன் ஹேகன் போன்ற நகர்களுக்குப் போனபோது இரகசியமாக வாங்கி வந்த "லைஃப் ஷோ வீடியோ கேஸட்டுகளும் கூட உண்டு. அவை படுநீலமானவை என்பது சுலபாவின் அபிப் ராயம். இது 1986ல் தான் படுநீலம். 1987ல் 88ல் இதைத் தூக்கி அடிக்கிற படுபடு நீலம்லாம் வந்துடும் பாரு' என்பாள் கோகிலா. 'அதுசரி இதெல்லாம் செய்யிறியே...? உங்களவர் "அப்ஜெக்ட்' பண்ணமாட்டாரா?' . . . . .

"அவரே பிஸினஸ் பார்ட்னtளை எண்டர் டிெயின் பண்ண நாலு பேருக்குக் கிளாஸ்ல தண்ணியை ஊத்திக் குடுத்து இதெல்லாம் போட்டுக் காண்பிக்கச் சொல்றதுகூடி உண்டுடி!" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/85&oldid=565753" இலிருந்து மீள்விக்கப்பட்டது